பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்.1 ஹா! கண்ணின்மணியே-காதற்கிளியே! உன் ஆடையானது சுத்தம் படிந்திருக்கிறது ரத்தம்! யமனே! நீ விரைவாய் என் அருகில் வருவாய்! என்னேக் கொன்று தின்று மென்றுவிடுவாய்! இதைப்பார்த்து, உடனே தன் ஆப்த நண்பன் மடிந்த தாக ஒருவன் கேள்விப்படுவாயிைன்-அவனுக்கு துக் கம் வராமலிருக்குமா ? ஐயோ! பாபம் இவனைப்பார்த்தால் எனக்கு பரிதா பமாயிருக்கிறது. சிவமே இந்த சிங்கத்தை யேன் படைத்தாய்! என் காதலியைக் கொல்லவோ நினைத்தாய்! இவ்வளவு-இல்லே இல்லே!-இப்படிப்பட்ட அழகிய பெண்மணியை எந்த சென்மத்தில் எந்த வுலகத்தில் எந்த தேசத்தில் எந்த ஊரில் நான் மறுபடியும் காணப் போகிறேன்! கண்ணிரே! நீ சொரிவாய்! கத்தியே! நீ வெளிவருவாய்! என் மார்பிற்குள் புகுவாய்! -ஏ ஏ! இந்தபக்கம் அல்லா-இந்தப்பக்ம்தான் இரு தயம் இருக்கிறது-ஆகவே- - (மறுபடியும் குத்திக்கொண்டு) நான் மாள்கிறேன்! மடிகிறேன்! சாகிறேன்! இதோ நான் என்னேக்குத்திக் கொள்கிறேன் இதோ நான் கொன்று கொள்கிறேன்! என் உயிர் போய்விட்டது! . ஆகாயத்தில் பறந்து விட்டது! சுவர்க்கம் புகுந்து விட்டது!