பக்கம்:மூவரை வென்றான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

107

பாலத்தைக் கட்ந்துகொண்டிருந்தார். அப்போது பாலத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து ஒரு சின்ன வயசுக் குடியானவப் பெண், மேலே ஏறி வந்தாள்.

அந்த நேரத்தில் அந்த மாதிரித் தனியிடத்தில் ஒரு சிறு பெண் வருவதை வியந்துகொண்டாலும், யாரோ துணிச்சல் காரி ஆற்றுக்கு இந்த நேரத்தில் ஆண் துணையின்றி வந்திருக் கிறாள்’ என்றெண்ணி, மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடந்தார்.

‘சாமீ! உங்களைத்தானே!’ என்று தேனில் குழைத்து எடுத்த மாதிரி ஒலித்தது . இனிய குரல். ஐயர் தலைமேல் இருந்த சுமையைப் பிடித்துக்கொண்டு திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்த இளம் பெண் அவரை நோக்கி வந்துகொண் டிருந்தாள். அவள் தலையில் துணிப் புடவையில் கட்டிய சிறு மூட்டை ஒன்று இருந்ததை ஐயர் இப்போதுதான் பார்த்தார்.

‘என்னம்மா? உனக்கென்ன வேணும்?’ என்று ஐயர் சற்றுத் தயங்கி நின்று கேட்டார்.

‘ஒண்னும் வேணாம் சாமீ! ஆம்பிளைத் தொணை யில்லே... கிருஷ்ணாவரத்துக்குப் போகணும். அவசர காரியம்... நீங்ககூட அந்தப் பக்கம்தான் போங்களோ?’

‘ஏம்மா? என்னதான் அவசரமா இருந்தாலும் அதுக்காக இந்த நேரத்திலே உன் மாதிரிச் சின்னஞ்சிறுசுக இப்படிப் புறப்படலா?...அசட்டுத் துணிச்சல்... ஏதோ நான் நதிக் குடிக்குப்போறேன்... நீ என்னைப் பார்த்துக் கேட்டதினாலே நான் உன்னைக் கொண்டுபோயி விட்டிடறேன்னு வச்சுக்க! நான் வரலேன்னா என்ன செய்வே... இன்னிக்குச் சரி... இனிமே இப்பிடி வராதே! வா! போகலாம்’ என்று ஐயர் அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு, உடன் அழைத்துக் கொண்டு மேலே நடந்தார்.

அந்தப் பெண் அவர்மேல் இடிக்காத குறையாக அவரை நெருங்கி ஒட்டிக்கொண்ட மாதிரி அவரோடு நடந்தாள். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் திடுக்கிட்டார். அவள்