பக்கம்:மூவரை வென்றான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மூவரை வென்றான்/தலைவெட்டிக்...


முடிவில் எப்பேர்ப்பட்ட்வரும் மீற முடியாத்தும் எவரும் சுலபத்தில் அகப்பட்டுக்கொள்ளக் கூடியதுமான ஒரு ‘மெல்லிய’ வலையை விரித்தார்கள். சிவகாசிக்குக் கிழக்கே உள்ள ‘அனுப்பங்குளம்’ என்ற ஊரில் ‘ராஜாம்பாள்’ என்று ஒரு சதிர்க்காரி (நாட்டியமாடுபவள்) இருந்தாள். தேவதாஸி குலத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இருபது இருபத்திரண்டு வயதுக்குமேல் இராது. கிளி என்றால் கிளி, ரதி என்றாள் ரதிதான் அவள். ராஜாம்பாள் சண்பகப்பூ நிறம். ஒரு சிரிப்புச் சிரித்துக் கிளுக்கென்று. கண்ணைக் சொடுக்கின்ாளானால், எப்பேர்ப்பட்ட பீஷ்மாச் சாரியும் கிறங்கிப் போவான். ரப்பரில் வார்த்தெடுத்து உருட்டித் திரட்டி வைத்தவைபோல வளைவும் நெளிவும் , கோடிட்டு விளங்குகிற வாளிப்பான சரீரம் அவளுக்கு: மயக்கும் விழிகளும் நயக்கும் சிரிப்புமாக மோகத்தின் ஸ்வரூப மென விளங்கினாள் அவள். மறனேரி, தாள் கொண்டான் புரம் அம்பலக்காரர்களின் கையிலிருந்து இருநூறு வராகன் பணம் (வராகன்-அந்தக் காலத்து நாணய மதிப்பீடு) ராஜாம்பாளிடம் போய்ச் சேர்ந்தது. அவள் எப்படி எப்படி நடித்து, என்னென்ன செய்யவேண்டும் என்ற விபரங்களும் கூறப்பட்டன. ராஜாம்பாள் தாளி, காசுக்கு ஆசைப்பட்டு இணங்கிவிட்டாள். அதோடு ஐநூறு வர்ாகனுக்குமேல் பெறும்ாணமுள்ள இரண்டு மோதிரக் கடுக்கண்கள் வேறு காரியம் சித்தியானால் அவளுக்கு அளிக்கப்படும் என்று ஆசை காட்டியிருந்தார்கள். ஐயர் காதுக்கு எந்த வகையிலும் எட்டாதபடி தேவ ரகசியமாக இந்த ஏற்பாடுகளைச் செய் திருந்தனர் அம்பலக்காரர்கள்.

அன்று பெளர்ணமி. மத்தியானத்துக்குமேல் ஊரிலிருந்து புறப்பட்டுச் சிவ்காசிக்கு வந்திருந்தார், மோதிரக்கடுக்கன் முத்துசாமி ஐயர். அங்கே வாங்கவேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும்போது இரவு ஏழு நாழிகை யாகிவிட்டது. அமாவாசை இருட்டிற்கும் பயப்படாதவர் பெளர்ணமி நிலவின் குளுமையை அனுபவித்துக்கொண்டே நடந்தார். சிவகாசி நகரெல்லையைக் கடந்து ஆற்றங்கரைப்