பக்கம்:மூவரை வென்றான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15


நான் ஒருத்தனாகச் சமாளிக்க வேண்டுமே! அதனால்தான் இந்த நிபந்தனை.”

“சரி, அப்படியே வைத்துக்கொள்ளேன். மூன்று விநாடியில் உன் எல்லைக்குள் நுழைந்துவிட முடியுமே! மூன்று நாழிகைக்குள் முந்நூறு தடவை நுழையலாமே? எப்படி நிபந்தனை போட்டால் என்ன? தோற்றுச் சந்தியாசியாகப் போவதென்னவோ நீதான்...”

“முடிவு எப்படியோ? சந்நியாசியாக யார் போகிறோமோ அதை இப்பொழுதே பேசுவானேன்? நிபந்தனைகளைப் பரஸ்பரம் நாம் எழுத்து மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்.”

“அதற்கென்ன? என் பந்தயத்தையும் நிபந்தனையையும் நாளைக்கே நான் செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கிறேன். நீ?...”

“நானும் நாளைக்கே செப்புப் பட்டயத்திலே எழுதிக் கொடுக்கிறேன்.”

“இது சத்தியம்தானா, வீரமல்லா!”

“நாளைக் காலையில் செப்புப் பட்டயத்தோடு வருகிறேன்.”

கூறிவிட்டு இருளில் கதவைத் திறந்துகொண்டு, தான் திருட்டுத்தனமாக எந்த வழியே வந்தானோ அதே வழியாக இறங்கிச் சென்றான் வீர்மல்லன்.

***

மறுநாள் நத்தம்பட்டி ஜமீந்தார் ஜமீன் முத்திரையும். கையொப்பமும் அமைந்த செப்புப் பட்டயமொன்றைத் தயார் செய்தார். அது வீரமல்லனிடம் கொடுக்கப்பட்டது. அதேபோல் வீரமல்லனின் கையொப்பமிட்ட செப்புப் பட்டயம் ஒன்று ஜமீந்தார் வீரமருதுத் தேவரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பட்டயங்களும் முறையே: பின்வருமாறு அமைந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/17&oldid=505586" இலிருந்து மீள்விக்கப்பட்டது