பக்கம்:மூவரை வென்றான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மூவரை வென்றான்/வெள்ளையத்...


ஒன்று-என்றிவ்வாறாக நாங்கள் இரண்டுர்க்காரர்களும் நெருக்கமான தொடர்புடையவர்கள். வீரபாண்டியத். தேவர் மகள் மீனாட்சியைப் பரிசம்போட்டுத் தம் மகனுக்கு. மனம் முடிப்பதற்காகக் கரிசல்குளத்து நாட்டாண்மைக் காரர் முன்வந்தார். கல்யாணம், கார்த்திகை, எந்த விசேஷ’ மென்றாலும் ஊரிலுள்ள அத்தனை தலைக்கட்டுகளையும் கலந்து செய்யவேண்டும்-என்று இங்கே கபிலக் குறிச்சியில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. இதன்படி நாட்டாண்மைத் தேவரும் எங்களுர்த் தலைக்கட்டுகளை ஒன்றுகூட்டி, மீனாட்சியின் கல்யாண சமாசாரத்தைப் பிரஸ்தாபித்தார். தலைக் கட்டுகளும் சம்மதித்துக் கல்யாணத்திற்கு அனுமதி கொடுத்தனர்.

வீரப்பாண்டியத்தேவர் மகள் மீனாட்சி நல்ல அழகி. அரபிக் குதிரை மாதிரி வளர்ந்த தேகம் கருவண்டுகள் போல் சுழலும் கவர்ச்சிகரமான விழிகளோடுகூடிய அவள் முகத்தை. இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எத்தனைக்கு எத்தனை அழகு இருந்ததோ, அத்தனை சாத்வீக மான சுபாவமுடைய பெண்.

‘இந்தப் பெண் தங்களுர் நாட்டாண்மைக்காரருக்கு மருமகளாக வரப்போகிறாள்’ என்ற செய்தி கரிசள்குளத் தாருக்கே தனி மகிழ்ச்சியைக் கொடுத்தது. கல்யாணத்தை அந்த வருஷம் சித்திரையில் விமர்சையாக நடத்திவிட்டார்கள். கல்யாணம் நடந்த மறுவாரமே. கரிசல்குளத்தார். - பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள். இது நடந்து மறுமாதத்திலேயே உள்ளுரிலிருந்த முறைப்பெண் ஒருத்தி வெள்ளையனை மாலையிட்டாள்.

ஆறு மாதம் கழிந்தது. இந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கென்றே காத்திருந்தவர்போல, வீரபாண்டியத்தேவர் ஒரு மாதம் குளிர் காய்ச்சலால் வருந்தி முடிவில் காலமானார். வெள்ளையத்தேவனையும், மீனாட்சியையும் மட்டுமில்லை; எங்கள் கபிலக்குறிச்சியையே மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டது அவரது மரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/58&oldid=509516" இலிருந்து மீள்விக்கப்பட்டது