பக்கம்:மூவரை வென்றான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மூவரை வென்றான்

"ஆமாம்! பண்ணைத் தேவரே! நீங்கள் மாடியில் எப்படி அகப்பட்டுக்கொண்டீர்கள்?-” என்றார் மாமன், மருந்தைக் குழைத்துக்கொண்டே,

“கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்ததும், இந்தக் காவற்காரர்களைக் கட்டிவைத்துவிட்டு, மாடிக் கதவை வெளிப்புறத்தில் தாழ்ப்போட்டுவிட்டார்கள். அவர்கள் இரும்புப் பெட்டியை உடைக்கிற சப்தம் கேட்டு, நாங்கள் விழித்துக்கொண்டு, பதறிப்போய் கீழே இறங்கினால், கதவு திறக்கவில்லை. வேறு வழியின்றி நீங்கள் இருவரும் வருகிறவரை தட்டிக்கொண்டே கூச்சலிட்டுக்கொண்டிருந்தோம்!... ஆமாம்! அது சரி; நீங்கள் இருவரும் இந்த அர்த்த ராத்திரியில் கரிசல் குளத்தில் இருந்து இங்கே என் வீட்டை நாடி வரவேண்டிய காரணம் என்னவோ?"—பண்ணைத் தேவர் கேட்டார்.

வெள்ளையத் தேவனுடைய காதில் மருந்தைக் குழைத்து: தடவி, அதைக் கட்டிக்கொண்டே, பண்ணைத் தேவரின் இந்தக் கேள்விக்கு விடை கூறினார் மாமன்.

“ஓ! அதைக் கேட்கிறீர்களா? சொல்கிறேன். பண்ணைத். தேவரே! ஓர் அவசர காரியமாக உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் வன்று வந்தோம். என் சம்பந்தி வீரபாண்டியத் தேவரின் மகள் மீனாட்சியின்—அதாவது இவன் தங்கையின் கணவன் உங்கள் கரிசல்குளம் நாட்டாண்மைக்காரரின் மூத்த மகன். அவன் இப்போது கொஞ்சம் சொத்துக்கு, ஆசைப்பட்டு, மீனாட்சியை மலடி என்று அபாண்டப் பழி சுமத்தி ஒதுக்கிவிட்டு, வேறோர் இடத்தில் மறுதாரத்திற்குப் பரிசம்போட முயன்று கொண்டிருக்கிறான். நீங்கள் இதில், தலையிட்டு நியாயம்தேடித் தருவீர்கள் என்று உங்களைக் கலந்துகொண்டு போக்த்தான் இவ்வளவு அவசரமாக வந்தோம்...அதோடு இன்னோர் விஷயம்! நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளாமலிருந்தால் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்...” என்று மாமன் மெல்லக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/76&oldid=508106" இலிருந்து மீள்விக்கப்பட்டது