பக்கம்:மூவரை வென்றான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

81

இந்த ஆறு வருடங்களுக்குள் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையில்தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்துவிட்டன! உயிருக்குயிராக வலதுகைபோல விளங்கிய மாமனும் பண்ணைத்தேவரும் இப்போது இந்த உலகில் இல்லை. அவர்கள் காலஞ்சென்று வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. பண்ணைத் தேவருடைய சொத்துக்கும் அதிபதியாகி, இந்த வட்டாரத்திலேயே ஒரு சிற்றரசனைப் போல விளங்கி, வந்தான் வெள்ளையத் தேவன். முதல் மனைவியிடம் ஒரு பெண்ணும் பொன்னியிடம் இரண்டு ஆண் குழந்தைகளுமாக மக்கட் செல்வங்களைப் பெற்றிருந்தான் அவன்.

கரிசல்குளத்தில் மீனாட்சி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிக் கணவனோடு அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தாள். பண்ணைத் தேவர் காலமான மறுவருடத்திலிருந்து, கபிலக்குறிச்சிக்குமட்டுமின்றிக் கரிசல்குளத்திற்கும் வெள்ளையத் தேவனே நாட்டாண்மையாகியிருந்தான். செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆள் புலத்தினாலும், இரண்டு ஊர்களின் ஆட்சியையும் திறமையாக, நடத்திவந்தான் அவன். இந்த வட்டாரத்து மக்கள் அவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி மதித்து வந்தார்கள். ஆறாண்டுகளாக ஊர் நன்மை குறித்து அவன் செய்த வீர தீரச் செயல்கள் அனந்தம், ஊர் மக்களுக்கும், பொதுக்காரியங்களுக்கும், கோவில் குளங்களுக்கும் செய்த தானதர்மங்கள் அளவிட முடியாதவை.

மாசி, மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் புதன்கிழமை, என்றுமில்லாதபடி அன்று என்னவோ காலையில் எழுந்ததிலிருந்தே கொங்கு மலைக்கு வேட்டையாடப் போகவேண்டு. மென்ற அபூர்வ ஆசை வெள்ளையுத் தேவனுக்கு ஏற்பட்டது. நான்கு தலைக்கட்டுக்களும் அவனுடன் துணையாக வேட்டைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.

காலையில் சுமார் பத்துப் பதினொரு நாழிகைக்கு வெள்ளையத் தேவனும் அவன் சகாக்களும் கொங்குமலையை அடைந்து வேட்டையைத் தொடங்கினார்கள். உச்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/83&oldid=507939" இலிருந்து மீள்விக்கப்பட்டது