பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
viii



இப்படி இசைத்துறையிலேயும் தாம் பெற்றிருக்கிற அறிவை இந்தப் பகுதியிலே அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியிருக் கிறார்கள் அதிலே இயல் இசைத் தமிழாகிய தேவாரத் திருமுறை களில் ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்கள் யாப்பு வகைகளிலே கட்டளை வழங்குகிறது என்கிற மரபையும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்

"இயலிசைத் தமிழாகிய, தேவாரத் திருமுறைகளில்

ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்களின் யாப்பு வகையினைக் கட்டளை என வழங்குதல் மரபு. 'கட்டளை' என்பது மாத்திரையளவும் எழுத்தியல் நிலையும் பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை உரையில் ஆடல் பாடல் இசையே தமிழே என வரும் தொடருக்கு தமிழ்' என்பதற்கு வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளைக் கூறுபாடுகளும் என அரும்பதவுரையாசிரியர் விளக்கவுரை கூறுவர் இதனைக் கூர்ந்து நோக்குங்கால் இசைத் தமிழில் வழங்கும் கட்டளை என்ற சொல் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாட்டினையே குறிப்பதென்பது நன்கு துணியப்படும் ஓசைவகையாகிய இக்கட்டளை யமைப்பின் அடியொற்றியே இசைப் பாடல்களின் தாளம் முதலிய பண்ணீர்மை அமைதல் இயல்பு இந்நுட்பம் கட்டளைய கீதக் குறிப்பும் என வரும் பழம் பாடல் தொடரால் நன்கு புலனாதல் கண்டு

மகிழலாம்"

இப்படி அருமையான தமிழருடைய கருவூலமாக விளங்குகிற தேவாரப் பாடல்களை மக்களுக்கு எடுத்து விளங்குகிற வகையில் பல்கலைக்கழகத்தில் அருமையான உரையாற்றி இருக்கிறார்கள் எனக்கு இவ்வளவு காலமாக இருந்து வந்த ஒரு ஐயத்தை இதிலே பேராசிரியர் அவர்கள் அற்புதமாக நீக்கியிருக்கிறார்கள்