பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இப்படிப்பட்ட வரலாற்றை வைத்துக் கொண்டிருக்கிற தமிழர்கள்தாம் தமிழிலே இசை உண்டா என்று கேட்கிற அவலத் திற்கு ஆளாகியிருக்கிறார்கள் அதற்கு இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம் அப்படிப்பட்டபோராட்டங்களில் பண்ணோடு இசைக்கப்பட்ட தேவாரம் உண்டு என்பதையும், 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்' என்ற பாராட்டுப் பெற்றவர் என்றும், ஏழிசையாய் இசைப்பயனாய் இறைவன் இருக்கிறான் என்று அடையாளமும், அர்ச்சனையும் பாட்டே யாகும் என்று விளக்கமளித்ததையும் நம்முடைய தேவாரம் வரலாறாக நமக்குத் தந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, அந்தக் காலத்திலேயே பண் அமைத்து தாளத்தோடு பாடல்களை நாடெங் கும் பாடிய அந்தப் பெருமையையும் நமக்கு விட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் தமிழன் பலவற்றை இழந்தது போல இசைப் பெருமையையும், இழந்து தவிக்கிறான். அந்த நேரத்தி லேதான் நம்முடைய பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் இந்த நூலிலே பண் சுமந்த - தேவாரப் பாடல்கள்' என்ற பகுதியை அற்புதமாக விளக்கியிருக்கிறார் இயல் துறையிலே மாத்திரம் நம்முடைய சுப்புரெட்டியார் அவர்கள் திறமை பெற்றவர் இல்லை. இசை நுணுக்கங்களிலும், தேவாரம் போன்ற இலக்கியங்களைப் படித்ததினாலே அதிலே பேரறிவு பெற்றிருக்கிறார் என்பதையும் இந்தப் பகுதி எடுத்துக் காட்டுகிறது. அதற்கு உதாரணமாக தேவாரப் பதிகங்களிலே, 'நட்ட பாடை, தக்கேசி, தக்க ராகம், குறிஞ்சி, பழந்தக்க ராகம், வியாழக் குறிஞ்சி, யாழ்முரி' என்ற ஏழு பண்கள் அடங்கிய நூற்று முப்பத்தாறு பதிகங்கள் முறைப்படுத்தப்பட்டிருப்பதைத் தெளிவாக எடுத்து விளக்கி இருக்கிறார்கள் இந்தப் பண்களின் பெயர்களை எடுத்துச் சொல்கிற நேரத்தில் அதை எப்படி இசை வல்லுநர்கள் பாடுகிறார்கள், அதற்கு அடிப்படையாக தாளக் கட்டோடு எப்படி அவைகள் அமைந்திருக்கின்றன 'தனனா தன தானா, தானா தனதானா, தானன தான தனா என்பது போன்ற பல பாடல்களுக்கு அந்தப் பண்ணின் வெளிப்பாடாக குறிப் பிட்டுக் காட்டியிருப்பது சிறப்பான ஒர் எடுத்துக்காட்டாகும்.