பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi கொள்ள முடியாமல் போய்விட்டது சமீப காலமாகத்தான் மக்களிடையே மறுமலர்ச்சி தோன்றி திருமுறைகள் பூட்டப்பட்ட பூசை அறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு மக்கள் மன்றத்திலே படிக்க வேண்டிய, படித்து ஆராய்ந்து உணர வேண்டிய, பின்பற்றுவதற்குரிய வாழ்வியல் நூலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு சீரிய பணியில் நம்முடைய சுப்புரெட்டியார் அவர்கள் இந்த நூலை ஆக்கியிருக்கிறார்கள் 'மூவர் தேவாரம்' என்கிற பகுதியில் திருஞாசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி அடிகளார் என்ற மூவருடைய தேவாரத்தையும் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்ட வகையில் விளக்கியிருக்கிறார்கள் அந்தப் பகுதி என்பது தேவார மூவர் களின் முக்கியமான பாடல்களை எடுத்துச் சொல்லி அதைப் பாடிய களங்கள், பாடியதற்கான சூழ்நிலை, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்று எளிய நடையில் சுருக்கமாக விளக்கியிருக் கிறார் ஆனால், இந்த நூலின் தலைப்பிற்கு ஏற்ற வகையில் இரண்டாவது பகுதிதான் தேவாரத்தின் புதிய பார்வையிலே பார்க்கத் தூண்டுகிற பகுதியாகும் பண் சுமந்த தேவாரப் பாடல்கள் என்பது இரண்டாம் பகுதி. தமிழில் இசை பாட வேண்டும் என்பதைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் நூறு ஆண்டுகளாக விவாதங்களுக்கிடையில் போராட் டமாக நடத்திக் கொண்டிருக்கிற துயரமான வரலாற்றைக் கொண்டது தமிழகம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரம் இசைக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது என்றும், அதற்கு முன்பே சங்க இலக்கியங்களில் இசையைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன என்றும், அதற்குப் பிறகு காரைக்கால் அம்மையார் காலத்திலே தொடங்கி 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த தேவார மூவர்கள்வரை, அதற்குப் பிறகு அருணகிரிநாதர் போன்றவர்கள், சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்த வள்ளல் பெருமான்வரை, நமது காலத்திலே தோன்றிய மாபெரும் புரட்சிக் கவிஞராக விளங்கிய மகாகவி பாரதியார் உள்பட தமிழிலே இசையை அடையாளம் காட்டியவர்கள்