பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.இராம. வீரப்பன் அவர்கள் வாழ்த்துரை நம்மிடையே நடமாடும் தமிழ்க் கருவூல மாக விளங்குபவர் பேராசிரியர் டாக்டர் ந. சுப் புரெட்டியார் அவர்கள் அவர்கள் தமிழிலே உள்ள எல்லா இலக்கியங்களையும், பெரும்பாலான அறிவியல் நூல்களையும் படித்துத் தெளிந்த அறிஞர் பெருமகனார் படித்த பண்டிதர் மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த கருத்துகளை மக்களுக்குப் பயனுள்ள வகையிலே வழங்குகிற ஆற்றல் படைத்தவர் அறிவியல் என்றாலே ஆன்மிகத்திற்குத் தொடர்பு இல்லை யென்று எண்ணுகிற இந்தக் காலத்தில் அறிவியலும், ஆன்மிகமும் இணைந்தால்தான் மனித வாழ்வு முழுமை பெறும் என்ற பேருண்மையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிற பெருமகனார் அவர் எத்தனையோ நூல்களைப் படைத்திருக்கிறார்கள் அத்தனையும் வகை வகையான பொருள்களில், தலைப்புகளில் உண்டான நூல்கள் அந்த வரிசையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய இசைத் துறையின் சார்பிலே அவர் ஆற்றிய அற்புதமான உரையை 'மூவர் தேவாரம் - புதிய பார்வை' என்கிற தலைப்பில் நூலாக ஆக்கியிருக்கின்றார் 'மூவர் தேவாரம்' என்றால் தமிழ் மக்களுக்கு அறிமுகமான ஒரு பெயர்தான் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய திருமுறையாக ஏற்றுக் கொண்டிருக்கிற நூல் தேவாரம் அந்த தேவாரம் இலக்கியமாக இசை நூலாக தமிழர்களின் வாழ்விற்குப் பயன்படுகிற ஒரு பண்பர்ட்டுப் பெட்டகமாக உணர்ந்து கொள் ளாமல் சமய வழிபாட்டிற்குரிய வணக்கத்திற்குரிய திருமுறைக ளாகவே தமிழ்மக்கள் எண்ணி பூசை அறையிலேயே பூட்டி வைத்துவிட்டார்கள் அதனாலேதான் கடந்த காலங்களில் தேவாரத்தின் பெருமையை தமிழ் மக்கள் முழுமையாக அறிந்து