பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O மூவர் தேவாரம் - புதிய பார்வை (8) திருவடி சூட்டப் பெறுதல்: தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றி மகிழ்ந்த நிலையில் சம்பந்தர் பெருமையைக் கேள்வி யுறுகின்றார் சொல் வேந்தர். உடனே திருநாரையூர் சென்று இறைவனைப் போற்றிய பின்னர் சீகாழி வந்தடைந்து சில நாட்கள் ஆளுடைய பிள்ளையாருடன் அளவளாவி மகிழ்கின்றார். அங்கிருந்து பல தலங்களை வழிபட்டுக் கொண்டு சத்தி முற்றத்தை அடைகின்றார். அங்கு சிவக்கொழுந்தீசனை இறைஞ்சி நின்று 'அடியேன் சிவப்பேறு அடைவதற்கு முன்னர் நின்னுடைய அழகிய திருவடிகளை என் தலை மேல் சூட்டியருள்க' என வேண்டும் முறையில், கோவாய் முடுகி யடுதிறற் கூற்றம் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேல் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண்டாய் முழங்குந் தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே." என முதற் பாடலாகத் தொடங்கும் திருப்பதிகத்தைப் (4.96) பாடிப் போற்றினர். இவ்வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் நாவுக்கரசரை நோக்கி நல்லூருக்கு வா என்று பணித்தருளி னார். அந்த அருள்மொழி கேட்டு அகமகிழ்ந்த அப்பரடிகள் சத்திமுற்றத்து சிவக்கொழுந்தீசரை வணங்கி திருநல்லுரை அடைகின்றார். அப்பொழுது சிவபெருமான் 'உன்னுடைய நினைப்பதனை முடிக்கிறோம் என சொல்வேந்தருக்கு உணர்த்தி அவர்தம் சென்னிமிசைத் தம் திருப்பாத மலர் சூட்டியருளினார். 61. அப்.தேவா, 4.96.1