பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-7 திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 79 ஆங்குள்ள தூங்கானைமாடம் என்ற திருக்கோயிலில் எழுந் தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டுச் சூலம் இடபம் என்ற குறிகளைத் தம் உடலில் பொறிக்குமாறு வேண்டுகின்றார். பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே." கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பணி மால்வரைபோல் இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள் தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந்தத்துவனே." எனவரும் திருவிருத்தமாகிய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அப்பொழுது இறைவனருளால் ஒரு சிவபூதம் பக்கத்திலுள்ளார் யாரும் அறியாதபடி அங்குத் தோன்றி ஆளுடைய அரசர் திருத்தோள்களில் மூவிலைச் சூலமாகிய இலச்சினையை இடப இலச்சினையுடன் பொறித்துச் சென்றது. அதனையுணர்ந்த நாவுக்கரசர் பெருமான் மனமகிழ்ந்து சிவபெருமான் திருவருளை நினைந்து கண்ணிர் சிொரிய நிலமிசை வீழ்ந்தெழுந்து ஆர்வம் பெருக உய்ந்தேன்' என மொழிந்து இறைவன் திருவடிகளைப் பரவி இன்புற்றார். 59. அப்பர் தேவா. 4.109:1 60. மேலது 4.109:10 - இப்பதிகத்தின், 3-8 பாடல்கள் காணப் பெறவில்லை.