பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மூவர் தேவாரம் - புதிய பார்வை கடல் தெய்வமாகிய வருணன் அலைகளாகின்ற கைகளால் கல்லே சிவிகையாக வாகீசரைத் தாங்கிக் கொண்டு திருப்பாதிரிப் புலியூரின்" அருகே கொண்டு வந்து சேர்க்கின்றான். இதனைச் சேக்கிழார் பெருமான், அத்திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த்தவக் குழாமெலாம் மேவி ஆர்த்தெழ எத்திசையினும்'அர என்னும் ஓசை போல் தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே." என்று காட்டும் முறையில் 'இயற்கையே இத்தெய்வ நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றது' என்று குறிப்பிட்டு மகிழ்வர். (7) சூலக்குறி இடபக்குறி பொறிக்கப் பெறுதல்: திருவதிகையில் வீரட்டானத்திறைவர்க்குத் தொண்டு புரிந்திருந்த நாவுக்கரசர் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் சேவித்துக் கொண்டு திருப்பெண்ணாகடத்தை" அடைகின்றார். 56. திருப்பாதிப் புலியூர்: கடலூர் இருப்பூர்த்தி நிலையத்திலிருந்து 114 கல் 57. 58. தொலைவு கடற்கரைத் தலம். கெடில நதியின் தென்கரையிலுள்ளது. புலிக்கால் முனிவர் பாதிரிமரத்தின் கீழிருந்து சிவலிங்கத்தைப் பூசித்தமையால் பாதிரிப்புலியூர் என்பது பழங்காலத்தில் இதன் பெயர் பாடலிபுரம் என்பது. வைணவத் திருத்தலங்களைச் சேவிக்கும் திட்டதில் திருஅயிந்திபுரம் சேவிக்க வந்த பொழுது (1965 என்பதாக நினைவு) இந்த நூலாசிரியர் இதனையும் சேவித்து மகிழ்ந்தார். மேலது மேலது - 132. பெண்ணாகடம் : விழுப்புரம் - திருச்சி இருப்பூர்தி வழியில் விருத்தாசல நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவு. தலப் பெயர் சுருக்கமாக கடந்தை என்றும் ஆலயப் பெயர் தூங்கானை மாடம் என்றும் வழங்கும். அப்பர் சுவாமிகள் தம்மைச் சிவன் சொத்து என்று உலகம் அறிய சூலக்குறி, இடபக் குறி இரண்டையும் தமது தூல உடலில் பொறித்துக் கொண்ட தலம் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர். திருவெண்காட்டு முக்குள விநாயகரை வழிபட்டு மெய்கண்டார் என்ற புதல்வரைப் பெற்ற தலம். (சிவஞான போதம் அருளியவர் மெய்கண்டார்)