பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 77 இது கேட்ட சமணர்கள் 'அவனைக் கல்லொடு சேர்த்துக் கயிற்றி, னால் பிணித்துக் கடலில் தள்ளுக' என்று கூறுகின்றனர். அரசனும் அவ்வாறே ஆணையிடுகின்றான்." கொலைத் தொழிலாளர்கள் அரசனது ஆணையை மேற் கொண்டு சமணர்கள் தம்மொடு வர திருநாவுக்கரசரை அழைத்துச் சென்று கல்லொடு பிணித்துக் கடலிலேற்றிக் கடல் நடுவே தள்ளி விட்டுத் திரும்புகின்றனர். ஏவலாளர் சென்ற பின்னர் மெய்த் தொண்டராகிய திருநாவுக்கரசர் எப்பரிசாயினும் ஏத்துவன் எந்தையை' என்று கூறி ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதுகின்றார். சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. (1) எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் (4.11) பாடிப் போற்றுகின்றார். இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய பொழுது அவரோடு பிணிக்கப் பெற்றுக் கடலில் தள்ளப் பெற்றக் கருங்கல். கடல்மீது தெப்பம் போல் மிதக்கின்றது. கல்லில் கட்டப் பெற்ற கயிறும் அறுந்தொழிகின்றது. நாவுக்கரசர் பெருமான் அக்கல்லின் மீது மிதக்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலின்வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ?? என்று உளமுருகிப் போற்றுகின்றார். 54. குற்றங்களைச் சுமத்துபவர்கள் இக்காலத்து ஆளுங் கட்சிப் பிரமுகர்கள் போல் செயற்படுகின்றனர். 55. பெரி.புரா. திருநாவுக்.புரா-129