பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மூவர் தேவாரம் - புதிய பார்வை மீண்ட அநுபவத்தைப் பின்னொரு காலத்து நினைந்து பார்க் கின்றார் நாவுக்கரசர். மக்களனைவரும் இறைவன் திருவருளைத் துணையென நம்பி எத்தகைய இடையூறுகள் நேரிடினும் மனங் கலங்காது அச்சமின்றி வாழ்தல் வேண்டும் என்று உலக மக்களுக்கு அறிவுறுத்துவாராய், "மக்களே, நும்மீது மலையே வந்து வீழ்ந்தாலும் நீங்கள் சிறிதும் கலங்காமல் நின்ற நிலையில் இருப்பீராக. சிவன் தமரை மதக்களிறும் கொன்றிட வல்லதோ? (கொன்றிட வல்லதன்று) எனத் தம் அநுபவ வாயிலாக வந்த உண்மையினை, மலையே வந்து வீழினும் மனிதர்காள்! சிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல் தலைவனாகிய ஈசன் தமர்களைக் கொலைசெய் யானைதான் கொன்றிடு நிற்குமே. (5.915) என வரும் திருப்பாடலில் காட்டியிருப்பதைக் கண்டு மகிழலாம். நாவுக்கரசரை நலியாமல் வணங்கி வந்த பட்டத்து யானை யைப் பாகர்கள் மீண்டும் அங்குசத்தால் குத்தி அவர்மீது செலுத்து கின்றனர். அப்பொழுது அந்த யானை பாகர்களைக் கொன்று வீழ்த்தியும், ஏவுவதற்குக் காரணர்களாக இருந்த,சமணர்கள்மீது பாய்ந்து அவர்களில் சிலரை மிதித்து வருத்தியும், நகர மக்கள் யாவருக்கும் தீராத கவலையை உண்டாக்கி விடுகின்றது. (6) கல்லொடு கட்டிக் கடலில் பாய்ச்சியவர் தப்பியது: யானையின் செயலுக்குத் தப்பியோடிப் பிழைத்த சமணர்கள் மன்னனை நாடிச் சென்று "வேந்தர் பெருமானே, தருமசேனன் நம் சமயத்திலிருந்து கற்றுக் கொண்ட மந்திர ஆற்றலால் நாம் ஏவிய யானையைக் கொண்டே நம் வலியைக் கெட்டொழித்து நுமது புகழுக்கும் இழிவினைத் தேடினான்' எனப் புலம்புகின் றனர். அரசன் சினமுற்று, 'இனி அவனுக்குச் செய்தற்குரிய தண்டனையைச் செப்புமின்' என்று அவர்களைக் கேட்கின்றான்.