பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 75 என முறையிடுகின்றனர். இவர்தம் சொற்கேட்டு மதி கெட்ட மன்னனும் 'செற்றவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு?' என வினவுகின்றான். 'நுமது பட்டத்து யானையைக் கட்டவிழ்த்து அவனுக்கெதிரே விடுவதே செய்யத் தகுந்தது' எனச் செப்புகின் றனர் அமணர்கள். அரசனும் அவ்வாறே செய்யப் பணிக்கின் றான். யானையும் கட்டவிழ்த்து விடப் பெறுகின்றது. அஃது ஒரு குன்றம் புறப்படுவதுபோல் திருநாவுக்கரசரை நோக்கி வருகின் றது. அவரோ தம்மை நோக்கிக் கடகளிறு வரக் கண்டும் சிறிதும் அஞ்சாது சிவபெருமானைத் தியானித்துப் பணிந்த வண்ணம் யானையை நோக்கி 'நாம் இறைவனுடைய அடியார்கள். யாதொன்றுக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இனி யாம் அஞ்சும்படி வருவதாகிய இடையூறு எதுவும் இல்லை' என அறிவுறுத்தும் கருத்துடன் "சுண்ணவென் சந்தனச் சாந்து" (அப்தே, 4.2) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையைப் பாடுகின்றார். பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கலமலக் கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும் வலமே திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும் நலமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நான் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். ஒவ்வொரு திருப் பாடலின் இறுதியிலும் 'கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம், அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' என்ற அடிகள் திரும்பத் திரும்ப வருமாறு பாடுகின்றார். அங்கு வந்த அந்தக் கொடுமதக் களிறு அன்புறுவாகிய நாவுக்கரசரை வலம் செய்து அவர்க்கெதிரே நிலத்தில் தாழ்ந்து இறைஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்று போகின்றது. இங்ங்னம் சமணர்களால் ஏவப் பெற்றுத் தம்மைக் கொல்ல வந்த அந்த மதக் களிறு இறைவனருளால் தம்மைக் கொல்லாது