பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 95 அடைகின்றார். அங்குள்ள பெருமானை கன்றினார் (4.58) என்ற திருப்பதிகத்தால் பருபதத்திறைவனை வழிபடுகின்றார். தெலுங்கு நாட்டில் பாடின பதிகம் இது. பருப்பதத்தினின்றும் பயணம் செய்து கயிலையை மனத்தில் நிறுத்தி இருபக்கங்களிலும் அடியவர்கள் தொடர்ந்து வர தெலுங்கு நாட்டினைக் கடந்து கன்னட நாட்டினை அடைகின்றார். கன்னட நாட்டில் கோகரணம்” (கோகரண்) என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ஒரு பதிகத்தால் கோகரணம் மன்னிய பெருமானை வழிபடுகின்றார். இப்பதிகம் 'சந்திரனும் தண்புனலும் (6.49) என்ற முதற்குறிப்புடைய தாண்டகமாகும். இது கன்னட நாட்டில் பாடிய பதிகமாகும். அங்கிருந்து 10 கல் தொலைவு மலை ஏறிச்சென்றால் இத்தலத்தை அடையலாம். இப்பொழுது திருப்பதியிலிருந்து சிறப்புப் பேருந்து விடப்படுகின்றது. அதில் செல்வது எளிது மலையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 1563 அடி, சம்பந்தரும் சுந்தரரும் காளத்தியிலிருந்தே பதிகம் அருளினர். அப்பர் அடிகள் நேரில் சென்று சேவித்தார். 74. கோகரணம்: துளு நாட்டிலுள்ள தலம். ஹஇப்ளி என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 90 கல் தொலைவிலுள்ளது. பேருந்து வசதி உண்டு. வழிநெடுகத் தேக்கு மரக்காடுகளும் மலைச்சரிவுகளும், இயற்கை வனப்பு மிக்க சோலைகளும் உள்ளன. தலம் மேற்குக் கடற்கரையிலுள்ளது. கர்நாடக மாநிலம் வடகன்னட மாவட்டத்திலுள்ளது. கயிலையிலிருந்து இராவணன் ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தான். மாலைக்கடன் முடித்தற் பொருட்டுத் தரையில் வைக்கக் கூடாதென்று நினைத்தபோது விநாயகர் ஒரு சிறுவன் போல் வெளிவந்து தமது கையில் சிவ லிங்கத்தை ஏற்று, மீண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளாவிடில் தரையில் வைத்து விடுவதாகச் சொன்னார். சிறிது நேரமானதும் தரையில் வைத்து விட்டார். மாலைக் கடன் முடித்ததும் இராவணன் எடுக்க முயன்றான். பெயர்க்க முடியவில்லை. இஃது இன்று ஒரு பசுவின் காது நுனியளவே தெரிகின்றபடியால் தலப்பெயர் கோகரணம் ஆயிற்று. நாமே இலிங்கத்தைத் தொட்டு வழிபடலாம். விநாயகர் திருவுருவம் நின்ற கோலமாக அழகு நிரம்பியுள்ளது. மகா சிவராத்திரியன்று திருத்தேர். பெருங்கூட்டம். இலட்சக் கணக்கான மக்கள் சேவிக்கின்றனர்.