பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மூவர் தேவாரம் - புதிய பார்வை அருள்புரிந்த கருணைத்திறம் இதுவோ?' என நெஞ்சம் நெக்குருகுகின்றார். கண்ணிர் சொரிகின்றார். நிலமிசை நீடு வீழ்ந்திறைஞ்சுகின்றார். திருக்கோயிலினுள் சென்று உடையர் கோவணம் (5.41) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகம் பாடி மீண்டும் இறைவனை வழுத்துகின்றார். விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான் பழுதொன் றின்றிப்பைஞ் Dலிப் பரமனைத் தொழுது செல்பவர் தம்வினை துளியே (3) என்பது இதன் மூன்றாம் பாடல். சில நாட்கள் இத்திருத் தலத்தி லேயே தங்கியிருந்து கைத் தொண்டு புரிந்து வருகின்றார். (14) கயிலாயத் திருப்பயணம்: கயிலைக் கோலம் காண விரும்பிய நாவுக்கரசர் காளத்திப் பெருமானை வணங்கிப் போற்றித் தம் வடதிசைப் பயணத்தைத் தொடங்குகின்றார். மலை, காடு, ஆறு, நாடு முதலியவற்றைக் கடந்து திருப்பருப்பதம்’ 72. காளத்தி: (யூரீ காளஹஸ்தி): காட்டுப்பாடி - ரேணிகுண்டா - கூடுர் இருப் பூர்தி வழியில் உள்ளது; காளத்தி நிலையத்திலிருந்து ஒருகல் தொலைவு (திருப்பதியில் பணியாற்றிய பொழுது 1960 - 77) பலமுறை சேவிக்கும் பேறு பெற்றவன் அடியேன் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் விரைவுப் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லுகின்றன. இவற்றில் செல்லுவதே எளிது. சிலந்தி - (=பூரீ), பாம்பு (= காளம்), யானை (= ஹஸ்தி) ஆகிய மூன்றும் வழிபட்டு முக்தி அடைந்த திருத்தலம். பஞ்சபூத தலங்களுள் இது வாயு தலம். சுயம்பு லிங்கம். கருவறையின் வாயிலில் கண்ணப்பர் காட்சி தருகின்றார் இங்கு சிவராத்திரி விழா புகழ் பெற்றது. தென் கயிலாயம்' எனக் கூறப் பெறும் தலங்களுள் இத்தலமும் ஒன்று. 73. திருப்பருப்பதம் (பூரீ சைலம்): சென்னை - குண்டக்கல் இருப்பூர்தி வழியில் குண்டக்கல் மும்பை செல்ல வேண்டும். அங்கு வண்டி பெஜவாடா - நந்தியால் - குண்டக்கல் இருப்பூர்தி வழியில் நந்தியாலை அடைதல் வேண்டும். அங்கிருந்து காட்டுவழியாக 20 கல் மகிழ்வுந்து அல்லது மாட்டு வண்டியில் செல்ல வேண்டும். பெத்த செருவு என்ற ஏரிக் கரைசேர்ந்து