பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 93 (13) பொதிசோறு பெற்றுப் பசி தீர்தல்: காவிரியின் இருகரைகளிலும் திருக்கோயில் கொண்டிருக்கும் பெருமான் களை வழிபட எண்ணிய சொல்வேந்தர் பழையாறையிலிருந்து புறப்பட்டுத் திருஆனைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த் துறை ஆகிய தலங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமான்களைப் பணிந்து போற்றிப் பைஞ்ஞலியை வழிபடச் செல்லுகின்றார். வருகின்றவர் வழியில் பசியினாலும் நீர்வேட்கை யினாலும் மிகவும் இளைப்புறுகின்றார். அவரது பசி வருத்தத் தைப் போக்கத் திருவுள்ளங்கொண்ட கயிலை நாதன் வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி வழிப் பயணம் செய்யும் அந்தணராக வடிவம் கொண்டு கையில் பொதி சோறுடன் அங்குத் தங்கியிருக்கின்றார். நாவுக்கரசர் அவரை அணுகிய போது அந்தணர் அவரை நோக்கி, "நீர் நீண்ட துரம் வழி நடந்து வந்தமையால் மிகவும் சோர்வுற்றிருக்கின்றீர். யான் கொடுக்கும் பொதி சோற்றை உண்டு இங்குள்ள தடாகத்தில் தண்ணீர் பருகி இளைப்பாறிச் செல்வீர்' என்கின்றார். மறையவர் கூறிய இன் னுரையைக் கேட்ட நாவுக்கரசர் இறைவன் திருவருள் இது போலும் எனக் கருதி அவர் தந்த பொதி சோற்றினை அருந்திப் பசி தீர்ந்து தண்ணீர் பருகித் தளர்வு நீங்கியிருக்கின்றார். அப்பொழுது அந்தண வடிவங் கொண்டு வந்த ஈசன் அப்பரை நோக்கி 'நீர் எங்கே ஏதுகின்றீர்?" என வினவ, சொல் வேந்தரும் திருப் பைஞ்ஞ்லிக்குப் போகின்றேன் என்கின்றார். அது கேட்ட அந்தணர் 'நானும் அங்கேதான் போகின்றேன்' என்று கூறி இருவரும் திருப் பைஞ்ஞ்லியை நோக்கி நடக்கின்றனர். திருப்பைஞ்ஞ்லியை நெருங்கியவுடன் அந்தணர் மறைந் தருளுகின்றார். இது கண்டு வியப்புற்ற அப்பர் பெருமான் 'ஆடல் புரிந்த பெருமான் அடியேனைப் பொருளாகக் கொண்டு 71. பைஞ்ஞ்லி: விருத்தாசலம் - திருச்சி இருப்பூர்தி வழியில் பிட்சாண்டார் கோயில் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. அப்பர் சுவாமிகட்கு இறைவன் கட்டமுது தந்த அற்புதத் தலம்.