பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மூவர் தேவாரம் - புதிய பார்வை கோட லரவார் சடையிற் கண்டேன்; கொக்கி னிதழ்கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல் தலையொன்று கையில் கண்டேன்; வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், வாய்மூ ரடிகளை நான் கண்ட வாறே. என்று தாம் கண்ட தெய்வக் காட்சியை வியந்துரைத்துப் போற்றி மகிழ்தலை நாமும் கண்டு மகிழலாம். இங்கு நான் கண்ட வாறே என்பதால் 'பொய் யடையாத அப்பர் பெருமானின் உள்ளம் புலப்படுகின்றது. திருஞானசம்பந்தர் காட்டவே தாம் கண்டிருப் பாரானால் காட்டக் கண்டேன்' என்பது போலவே பாடியருளி யிருப்பார் என்பது ஈண்டு மேலும் சிந்திக்கத்தக்கது. (12) உலவாக் கிழிபற்றிய குறிப்பு: பாண்டி நாட்டுத் திருத்தலப் பயணத்தில் மறைக்காட்டீசரை வழிபட்டபின் நாகைக் காரோணம் முதலிய பதிகளைப் பணிந்தேத்தி திருவிழிமிழலையை அடைகின்றார். விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெரு மானைப் போற்றி திருவாவடுதுறை யணைந்து மாசிலாமணியீசர் மலரடிகளை வணங்கி, மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கையானைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவுரர்க் கம்போலும் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறையனாரே (4.56:1) என் வரும் திருநேரிசை பாடிக் கழுமலப் பிள்ளையாராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஆயிரம் பொன் நிறைந்த உலவாக் கழியினைக் கொடுத்தருளிய அருட்செயலை நினைந்து உள்ளம் உருகிப் போற்றி மகிழ்கின்றார்.