பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 91 வளரிள மதியமொ டிவராணி வாய்மூ ரடிகள் வருவாரே (1) என்பது, இந்நிகழச்சியைச் சேக்கிழார் பெருமான், மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மாலயனும் நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்தருள ஆடல் கண்டு பணிந்தேந்தி அரசுங் காணக் காட்டுதலும் 'பாட அடியார் என்றெடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்." என்று கூறுவர். 'இப்பாடலில் 'அரசர் காணக் காட்டுதலும் என்ற தொடரில் காட்டுதல்' என்கின்ற வினை இறைவனுக்குரியது. 'காணுதல் இருவர்க்கும் பொதுவான தொழில் ஈண்டு இது போலப் பொருள் கொள்ளாமல் ஞானசம்பந்தர்க்கு நேரே காட்சி கொடுத்ததாகவும், பின்பு அவர் அப்பருக்குக் காட்டுவதாகவும் பொருள் கொள்ளுதல் சேக்கிழாரைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாக முடிந்து விடும்" வாய்மூர் அடிகள் தமக்கும் நேரே காட்டிய ஆடலைக் கண்டு மகிழும் அப்பர் பெருமான் 'பாட அடியார் (6.77) என்ற திருத் தாண்டகப் பதிகத்தில் தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்துகின்றார். பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல்கண்டேன்; கங்கை யானைக் 69. பெரி.புரா, திருநாவுக்.புரா. 281 70. அப்பர் பெருமான் - வாழ்வும் வாக்கும் பக் 442. (பூம்புகார்ப் பேரவைக் கல்லூரி வெளியீடு, மேலையூர் - 609107 (மே - 1980).