பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மூவர் தேவாரம் - புதிய பார்வை மயமான திருக்கோயிலை எதிரே காட்டி அதனுள்ளே புகுந்து மறைந்தருள்கின்றார். நாவுக்கரசருக்கு இம்மறைவு மனக்கலக் கத்தை உண்டாக்குகின்றது. இந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அடியார்கள் மூலம் நாவுக்கரசர் திருவாய்மூருக்குச் சென்றதைக் கேள்வியுற்று அவனைப் பின் தொடர்கின்றார்; தம்பால் வைத்த பேரன்பினால் தம்மைத் தேடிவருகின்ற சம்பந்தப் பிள்ளையாரைச் சேய்மையில் காண்கின்றார் நாவுக்கரசர். பிள்ளையார் தம்மை அணுகிய நிலையில் 'இறைவனின் திருக்குறிப்பறியாது இக் கதவைத் திறக்கப் பாடிய என்னைக் காட்டிலும், செந்தமிழ்ப் பதிகத்தால் அடைப்பித்த ஞானசம்பந்தப் பிள்ளையார் இதோ வந்து நிற்கின்றார். எளிய னேற்கே அல்லாது இப்பெருமானுக்கும் தம்மை மறைக்கும் வன்மை யுடையவரோ வாய்மூரடிகள்?' என வினவும் குறிப்புடன், திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே (5.50:6) என்ற திருப்பாடலைப் பாடுகின்றார். வாய்மூர் இறைவனும் பிள்ளையார் காண நேரே தோன்றி ஆடல் காட்டி அருள் புரிகின்றார். அந்த அழகிய தெய்வக் காட்சியைக் கண்ட காழிப் பிள்ளையார் “தளரிள வளரென வுமைபாட' (சம்ப.2.111) என்ற திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றித் தாம் கண்ட தெய்வக் காட்சியினைத் தம் கெழுதகை நண்பர் ஆளுடைய அடிகட்கும் காட்டி மகிழ்கின்றார். இப்பதிகத்தின் முதற் பாடல், தளரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியா வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணிரணிந்தோர் சென்னியின்மேல்