பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 89 திருமறைக்காட்டு மாமணியின் பாதங்களை மனத்திடையே வைத்து எண்ணித் துயிலுகையில் அம்மையப்பர் பொன் மேனி யில் வெண்ணிறு பூசிய வேடத்தினராய் அவர் கனவில் தோன்று கின்றார். தோன்றியவர், 'அன்பனே, வாய்மூரில் இருப்போம்; எம்மைத் தொடர்ந்து வருக' என்று கூறி முன்னே செல்லுகின் றார். இந்நிலையில் மெய்யுணர்வு பெற்று விழித்தெழுகின்றார் நாவுக்கரசர். 'யான் இருக்கும் இடத்தில் என்னைத் தேடிக் கொண்டு வந்து தம்மைத் திருவாய்மூர்த்" தலைவர் என்ற அடையாளங்களுடன் சொல்லி ‘அங்கேவா என்று சொல்லிப் போயினர். அஃதென்கொல்?' என ஐயமுற்று, எங்கே என்னை இருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடையாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார தென்கொலோ? (5.50:1) மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்கு தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ? (5.50:2) என்ற குறுந்தொகைப் பதிகம் பாடிக்கொண்டு “இஃது எம்பெருமான் அருளாகில் யானும் ஏகுவேன்' என எழுந்து செல்லத் தொடங்கு கின்றார். இறைவனும் அப்பரடிகட்குக் கனவில் தோன்றிய திருக்கோலத்துடன் விரைந்து நடந்தருள்கின்றார். இங்ங்னமே நெடும் பொழுது விரைந்து நடந்தும் தமக்கு முன் செல்லும் வாய்மூர் அடிகளை அணுக முடியவில்லை. இந்நிலையில் இறைவன் அணிமையில் காட்சி நல்குபவர் போலப் பொன் 68. வாய்மூர் (திருவாய்மூர்) மயிலாடுதுறை காரைக்குடி இருப்பூர்தி வழியில் திருநெல்லிக்காவல் என்ற நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. அப்பருக்கு வருமாறு இறைவன் கட்டளையிட அவர் சென்று தரிசித்ததை 5.501, 2 என்றபாடல்கள் பகரும்.