பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்று போற்றி மகிழ்வர். இவ்வாறு வேதகளால் வழிபடப் பெற்று அடைக்கப்பெற்ற திருக்கதவு அவ் வேதங்களில் வல்ல எவரும் வாராமையினால் நெடுங்காலம் திறக்கப் பெறாதிருந்து பின்பு நாவுக்கரசரின் திருவாய்மொழியால் திறக்கப் பெற்றதாகிய இந்த அற்புத நிகழ்ச்சி, பண்டை நான்மறைக்கும் தேவாரத் திருமுறை கட்கும் சிறிதும் வேற்றுமை இல்லை என்பதனைத் தெளிவாக வலியுறுத்தலைக் காண்கின்றோம். திருநாவுக்கரசரின் செந்தமிழ் மறைகளாகிய திருமுறைகளின் பெருமையினை, மணியினை மாமறை காட்டு மருந்தினை வன்மொழியால் திணியன நீள்கதவம் திறப்பித் தனதெண் கடலிற் பிணியன கண்மிதப் பித்தன் சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே." என்று நம்பியாண்டார் நம்பியும் விரித்துரைத்துப் போற்றுவர். (11) வாய் மூரடிகள் அருளிய காட்சி: திருமறைக்காட்டு ஈசரின் திருவருள் பெற்ற சண்டை வேந்தரும் சொல் வேந்தரும் திருமறைக்காட்டிலுள்ள திருமடம் ஒன்றில் அடியார்களுடன் வந்து அமர்கின்றனர். தாம் அரிதில் திறக்கப்பாடிய தன்மையும், காழிப் பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடிய எளிமையும் நாவுக்கரசரைச் சிந்திக்க வைக்கின்றன. 'திருக்கதவு திறக்கத் தாழ்ந்ததன் காரணம் இறைவனது திருக்குறிப்பினை யான் உணராது அயர்ந்தமையே' எனக் கவலையுற்ற மனத்தினராய் அத்திரு மடத்தில் ஒருபால் துயில் கொள்ளுகின்றார் வாய்மை திறும்பா வாகீசர். 67. திருத்தொண்டர் திருவந்தாதி - 20