பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 87 அப்பொழுது பிள்ளையாரும் அரசரும் நிலமிசை வீழ்ந் திறைஞ்சி நேர்முக வாயில் வழியே திருக்கோயிலுட் புகுந்து மறைக்காட்டீசரை வணங்கி வண்தமிழ் மாலைகள் பாடிப் போற்று கின்றனர். அப்பொழுது நாவுக்கரசர் காழிப் பிள்ளையாரை நோக்கி, 'இறைவன் திருவருளால் இத் திருக்கதவு நாடோறும் திறக்கவும் அடைக்கவும் பெறும் நிலையில் இந்நிறைக்கதவம் அடைத்திடும்படி பாடியருள்க' என வேண்ட, பிள்ளையாரும் "சதுரம் மறை” (சம்பந்.தே. 2.37) என்பதை முதற்குறிப்பாகக் கொண்ட பதிகத்தின், சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க வெனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே (1) என்ற முதற் பாடலைப் பாடியவுடன் இறையருளால் திருக்கதவம் விரைவில் அடைக்கப்பெறுகின்றது. அதுகண்டு இருவரும் பெரு மகிழ்ச்சி அடைந்து மறைக்காட்டீசரைப் போற்றுகின்றனர். பிள்ளையார் தாம் எடுத்த திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களையும் பாடித்திருக்கடைக்காப்புச் சாத்தியருள்கின்றார். அன்று முதல் அத்திருக்கதவு திறத்தலும் சாத்தலுமான வழக்கத்தைப் பெறுகின்றது. இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு அடியார் கூட்டம் அடைந்த மகிழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான், அங்கு நிகழ்ந்த அச்செயல்கண் டடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திடமெய் பொழியும் கண்ணி பரந்திழிய எங்கும் நிகரொன் றில்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நாங்கள் புகலிப் பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணியபின்" 66. பெரி.புரா. திருநாவு.புரா, 274