பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மூவர் தேவாரம் - புதிய பார்வை முன்னாளில் மறைகளால் அமைக்கப்பெற்ற திருக்கதவு மறை களில் வல்ல அன்பர் ஒருவரும் வாராமையால் நெடுநாள் திறக்கப் பெறாதிருந்தது. அதனால் அவ்வூர்ப் பெருமக்கள் வேறொரு வாயில் அமைத்து வேதவனப் பெருமானை வழிபட்டு வரலா யினர். இச் செய்தியை அறிந்த காழிப் பிள்ளையார் நாவுக்கரசரை நோக்கி 'அப்பரே, நாம் எப்படியும் நேர் முகமாகவுள்ள திருவாயிலின் வழியே சென்று மறைக்காட்டிறைவரை வழிபட வேண்டும். ஆதலால் இத் திருக்கதவு திறக்கும்படி பதிகம் பாடுவீராக' என்று வேண்ட அன்புப் பிள்ளையாரின் விருப்பத் திற் கிசைந்து சொல்வேந்தரும் "பண்ணினேர் மொழியாளுமை' (5.10) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தைப் பாடிப் பரவுகின்றார். பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே (1) என்ற முதற்பாடலைப் பாடியவுடன் தமிழ்ப்பாடல்களின் சுவை நலங்களைத் துய்ய விரும்பிய மறைக்காட்டீசர், திருக்கதவின் திருக்காப்பு நீக்கக் காலந்தாழ்த்துகின்றார். திருநாவுக்கரசரும் பதிகம் முழுவதும் பாடி முடிக்கும் நிலையில் தம் வேண்டு கோட்கிணங்கி இறைவன் திருக்கதவு திறந்தருளாமை கண்டு வருத்தமுறுகின்றார். இந்நிலையில் இராவணனை விரலால் அடர்த்திட்ட நீவிர் ஒருசிறிதும் இரக்கமுடையவர் அல்லீர்' என இறைவனை நோக்கிப் பிணங்கிப் பேசும் முறையில், அரக்க னைவிர லால்அடர்த் திட்டநீர் இரக்க மொன்றி லீர்எம் பெருமானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கத வந்திறப் பிம்மினே (11) என்ற இறுதிப் பாடல் அமைகின்றது. இந்நிலையில் பன்னெடு நாட்களாக அமைக்கப் பெற்றிருந்த திருக்கதவு இறைவனருளால் திறக்கப் பெறுகின்றது.