பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் ; (2) திருநாவுக்கரசர் 85 பாடியருள்கிறார். அப்போது உயிர்துறந்த மூத்த மூத்த திருநாவுக்கரசு உறக்கம் நீங்கி எழுபவனைப் போன்று உயிர் பெற்றெழுகின்றான். எழுந்தவன் நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கு கின்றான். சொல் வேந்தரும் அவனுக்கு திருநீற்றமுது வழங்கி யருள்கின்றார். இந்தத் திருப்பதிகமும் "விடந்தீர்த்த திருப்பதிகம்" என்று வழங்குகின்றது. இது பொதுப் பதிகம். அப்பூதியடிகளும் அவர்தம் இல்லத்தரசியாரும் மைந்தன் உயிர் பெற்றெழுந்தமை கண்டும் மகிழ்ச்சியுறாது அப்பர் பெருமான் அமுது செய்தருளக் காலந்தாழ்ந்ததே எனச் சிந்தை நோகின்றனர். அவர்தம் மனக் கருத்தறிந்து சொல் வேந்தர் அமுது செய்தருள அவரது இல்லத்திற்கு எழுந்தருள்கின்றார். இதனால் மகிழ்ச்சி யுற்ற அப்பூதியடிகள் நாவுக்கரசர் பெருமானுக்கு திருந்திய வாச நன்னீர் ஈந்து திருவமுது செய்தருளுமாறு வேண்டுகின்றார். அப்பொழுது அப்பர் பெருமான் 'புதல்வர்களும் நீரும் இங்கு என்னுடன் இருந்து அமுது செய்வீர்களாக' எனப் பணித்தருள, அவ் வண்ணமே அப்பூதியடிகளும் அவர்களுடைய புதல்வர் களும் அப்புர் அடிகளின் இருமருங்கும் அமர எல்லோரும் சேர்ந்து அமுது செய்து மகிழ்கின்றனர். (10) மறைக்கதவம் திறத்தல்: சொல் வேந்தரும் காழி வேந்தரும் திருப் பேரெயில் ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு மறைக்காட்டுக்கு" எழுந்தருள்கின்றனர். திருக் கோயிலை வலம் வந்து பண்டைநாளில் வேதங்களால் இறைவனை வழிபட்டு அடைத்த திருக்கதவு அமைந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர். 65. மறைக்காடு (வேதாரண்யம்) திருத்துறைப் பூண்டி கோடிக்கரை இருப்பூர் திவழியிலுள்ள வேதாரண்யம் என்ற நிலையத்திலிருந்து 1/2 கல் தொலைவு. வேதங்கள் பூசித்து மூடி விட்டுச் சென்றிருந்த கதவுகளைப் பதிகம் பாடி அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத்தலம். தமிழ் மொழியி லுள்ள தேவாரம் வடமொழி வேதத்திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புல னாக உலகுக்கு அறிவித்த அற்புதத் தலம்.