பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மூவர் தேவாரம் - புதிய பார்வை வீட்டில் குருத்தைச் சேர்த்தபிறகு சிறுவன் இறந்துபடுகின்றான். மகன் நிலையை நோக்கிய பெற்றோர்கள் பெரிதும் கலக்க மடைந்து மரித்த செய்தி புலனாகாதபடி புதல்வன் உடலைப் பாயினுள் மறைத்து வைக்கின்றனர். நாவுக்கரசர் அமுது கொள்ள எழுந்தருள்கின்றார். அனை வர்க்கும் திருநீறு அளிக்கும்போது மூத்த திருநாவுக்கரசைக் காணவில்லை. 'அவனை அழையும்' என்று அரசர் சொல்ல, 'இப்போது இங்கு அவன் உதவான்' என்று கூறுகிறார் அப்பூதியார். இதனைச் செவிமடுத்த நாவுக்கரசரின் செவ்விய திருவுள்ளத்தில் ஒருவித தடுமாற்றம் உண்டாகின்றது. அப்பூதியாரை நோக்கி, "என்னுள்ளம் இவ்வுரை கேடகப் பொறாது ஏதோ வேண்டாதது நிகழ்ந்துள்ளது, நிகழ்ந்ததை மறைக்காது நேர்மையுடன் உரைப்பீ ராக' என்று பணிக்கின்றார். அந்தணச் செம்மல் மிகவும் நடுக்க முற்று, தன் மைந்தனுக்கு நேர்ந்த துயர் நிலையைத் தெரிவிக் கின்றார். இத்துயரச் செய்தியை உணர்ந்த நாவுக்கரசர், 'நீர் செய்தது மிக நன்றாயுளது! இவ்வாறு வேறு யார் செய்வார்?' என்று கூறி எழுந்து சென்று உயிர் நீத்த மூத்த திருநாவுக்கரசரின் உடலைத் திருக் கோயிலுக்குமுன் கொணரச் செய்து அந்த உடலை நோக்கிச் சிவபெருமான் அருள் புரியும் வண்ணம் 'ஒன்று கொலாமவர்" (4.18) என்ற முதற்குறிப்பினையுடைய செந்தமிழ்த் திருப்பதிகம் பாடுகின்றார். ஒன்று கொலாமவர் சிந்தை யுயர்வரை ஒன்று கொலாமுய ரும்மதி சூடுவர் ஒன்று கொலாமிடு வெண்டளை கையது ஒன்று கொலாமவர் ஊர்வது தானே (1) என்பது முதற்பாடல். அருளுருவாகிய சிவபெருமானின் மேனிக்கண் அமைந்த அளப்பரிய தோற்றங்களை ஒன்று முதல் பத்து ஈறாக வைத்து எண்ணும் நிலையில் பத்துப் பாடல்களைப்