பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 83 மங்கலமாம் திருவேடத்துடன் இம்மொழிய பேசிய நீர் எங்குறைவீர்? நீர்தாம் யார்? இயம்புவீர்!" என்று வெகுண்டு உரைக் கின்றார். இங்ங்னம் அந்தணச் செம்மல் சினமுற்று மொழிந்ததைக் கேட்டு அவரது அன்பின் திறத்தை அறிந்த நாவுக்கரசர் 'புறச் சமயத்தினின்று மீளும் பொருட்டு இறைவன் சூலை நோயினைத் தந்து ஆட்கொள்ள அடைந்து உய்ந்து தெளிந்த உணர்வற்ற சிறுமையேன் அடியேன்' என்று மறுமொழி தருகின்றார். இவ் வுரை கேட்ட அப்பூதியடிகள் தம்முடைய குல தெய்வமாகிய திருநாவுக்கரசரே இங்கு எழுந்தருளியுள்ளார் எனத் தெளிகின் றார். இதனைச் சேக்கிழார் பெருமான், அரசரிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம் கரகமல மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய உரைகுழறி உடம்பெல்லாம் உரோமபுள கம்பொழியத் தரையின்மிசை வீழ்ந்தவர்தம் சரணகம லம்பூண்டார்." என்று அற்புதமாகக் காட்டுவார். மனைவி மக்கள் முதலிய சுற்றத் தாருடன் திருநாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கு கின்றார்." தம் இல்லத்தில் திருவமுது செய்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார். அப்பர் பெருமானும் அந்தணச் செம்மலின் பேரன்புக்கு இசைந்தருளினார். அப்பூதியடிகள் விரும்பிய வண்ணம் அறுசுவை உண்டி தயாராகின்றது. திருவமுது செய்து வைக்க தோட்டத்திற்கு வாழைக்குருத்து அரிந்து வரச் சென்ற மூத்த திருநாவுக்கரசை குருத்தின் அடியிலிருந்த அரவு தீண்டி விடுகின்றது. விரைந்தோடி 63. பெரி.புரா. அப்பூதியடிகள் - 17 64. மேலது - 20