பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறை ஆளுடைய பிள்ளையார் முதன் முதல் அருளியது தோடுடைய செவியன் (1,1) என்னும் முதற்குறிப் புடைய பிரமபுரத் திருப்பதிகமாகும். எல்லையிலா மறைகளுக்கெல்லாம் முதலாக அமைந்தது 'ஓம்' என்னும் எழுத்தாகிய பிரணவம் ஆகும். 'ஓம்' என்பதி லுள்ள ஒகாரத்தினை 'தமிழ் என்பதன் முதல் எழுத்தாக அமைந்த தகர மெய்யுடன் இணைத்துத் தோன்றிய சிறப்பு தோடுடைய செவியன்' என்ற இத்திருப்பதி கத்துக்கு உண்மையால் முதல் திருமுறையில் முதல் திருப்பதிகமாக முறைப்படுத்தப் பெற்றது." இப்படித் தெளிவான கருத்துகளை தமிழர்களின் ஆன்மிகக் கருவூலமாக விளங்குகிற தேவாரத்தை நடமாடும் தமிழ்க் கருவூலமாக நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிற பெரியவர் 86 வயதைத் தாண்டி இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கிற இளைஞர். ஒய்வறியாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓர் அபூர்வமான மனிதர் இந்த நூலை வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் ஐந்து நூல்கள் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து நூல்கள் அல்ல, பல நூல்கள் அவர் கள் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான ஆற்றலும், ஆயுளும் அவருக்கு இறைவன் என்று அழைக்கிற பெயரானாலும் சரி, இல்லையில்லை இயற்கை என்றுதான் சொல்வோம் என்று கூறுகிற பெயரானாலும் சரி, நம்மை நடத்திக் கொண்டிருக்கும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் நம்மை மீறிய சக்தி நம்முடைய சுப்புரெட்டியார் அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும், இதுபோன்ற அருமையான நூல்களைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று வணங்கி வாழ்த்தி நிறைவுசெய்கிறேன். வணக்கம்.