பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 103 எனவரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தை (6.27) அருளிச் செய் தார். அடிகளது உறுதிப்பாட்டினை யுணர்ந்த அரம்பையர்கள் தங்களாற் செய்யத்தக்கது எதுவுமில்லை எனத் தெளிந்து அடிகளை வணங்கிச் சென்றார்கள்." திருப்புகலூர்ச் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு மகிழும் வாகீசர் தம் அந்தக் கரணங்கள் புறத்தே செல்லாது உள்ளே ஒடுங் கப்பெற்றுத் திருவடியைத் தலைப்படும் செவ்வியினை எய்து கின்றார். இம் முன்னுணர்வு மூளப்பெற்ற நிலையில் புகலூர்ப் பெருமானை நோக்கி 'உன்னுடைய திருவடிக்கு எளியேன் வருகின்றேன் என்று நெஞ்சம் கசிந்துருகும் நிலையில், எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுகேன் ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே (1) என வரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் (6.99) பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஐக்கியமாகி இன்புற்றார். (இது அடிகளாரின் 81-ஆம் அகவையில்)." 87. பெரிபுரா.திருநாவு.புரா 416-427 88. அதற்குமேல் 7 ஆண்டுகள் கடந்த அடியேன் அப்பர் பெருமான் அடைந்த நிலை வரும் நாளை எதிர்பார்த்த நிலையில் உள்ளேன். -