பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 மூவர் தேவாரம் - புதிய பார்வை (15) அண்ணலார் சேவடியில் சேர்தல்: திருநாவுக்கரசரது உள்ளத்துறுதியை உலகத்தார்க்குத் தெளிவாகப் புலப்படுத்தக் கருதுகின்றார் கயிலை நாதன். அப்பர் பெருமான் உழவாரத் தொண்டு புரியுங்கால் அவ்வுழவாரம் நுழைந்த இடங்களிலெல்லாம் பொன்னும் நவமணிகளும், விளங்கித் தோன்றும்படி செய்தனன். 'ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் உரவோராகிய அப்பர் பெருமான் பொன்னும் மணியுமாகிய அவற்றைப் பருக்கைக் கற்களோடு ஒப்பக் கருதி உழவாரத்தில் ஏந்தி அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசியெறிந்தார். அழகிற் சிறந்த அரம்பை ஊர்வசி முதலிய தேவமாதர்கள் மின்னற் கொடிபோல் வானுலகத்தினின்றும் இறங்கிவந்து சொல்வேந்தர் திருமுன் நின்று இன்னிசைப் பொருந்தப் பாடியும் இன்பச் சுவையினைப் புலப்படுத்தும் ஆடல்களை இயற்றியும் அடிகள்மேல் மலர்களைத் தூவி அவரை அணைபவர் போன்று அணுகியும் கூந்தல் அவிழ இடை நுடங்க ஒடியும் மீண்டும் அவரை நெருங்கியும் பல்வேறு சாகசங்களைக் கையாண்டு அவரை மயங்குவதற்குப் பெரிதும் முயன்றனர். எனினும் அப்பெருமான் இறைவன் திருவடிகளை மறவாது, தம் ஒருமை நிலையில் சிறிதும் தவறாது, தாம் செய்யும் திருப்பணியில் உறைப் புடையராய் விளங்கினார். 'யான் திருவாரூர் அம்மானுக்கு ஆட் பட் டேன். நும்மால் அலைக்கழிக்கப்படும் எளிமையுடை யேன் அல்லேன். நீவீர் என்னைத் துன்புறுத்தாதீர்' என்று கூறும் போக்கில், பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்துதான், யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கலைத் தொடர்ந்தோரையடங்கச் செய்யும் எம்மான்றன் அடித்தொடர்வான் உழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.