பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 101 இங்ங்னம் தூய தொண்டராகிய நாவேந்தர் கயிலைத் திருக்கோலத்தைக் கண்டு மகிழும் நிலையில் கயிலை நாதன் தாம் காட்டிய கயிலைக் காட்சியை மாற்றித் திருவையாற் றமைந்த பழைய நிலையினைப் புலப்படுத்தியருளுகின்றார். இந்நிலையில் அப்பர் பெரிதும் வருந்தி ஒருவாறு தெளிவு பெறுகின்றார். கயிலை நாதன் அருளால் தாம் கண்டகயிலைக் காட்சியை உலக மக்கள் உணர்ந்து மகிழும் வண்ணம் மாதர் பிறைக் கண்ணி யானை (4.3) என்ற பதிகத்தைப் பாடுகின்றார். மாதர்பிறைக் கண்ணி யானை மலையான் மகளோடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின்பு புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன். (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். கயிலைக் கோலங்காட்டிய ஐயாற்றிறைவனைத் தொழுது திருத்தாண்டகம், திருக்குறுந் தொகை, திருநேரிசை, திருவிருத்தம் முதலிய சொன் மாலைகளைப் பாடித் திருத்தொண்டு செய்து அங்கு அமர்ந்திருக்கின்றார். இந்த இரண்டு காட்சிகளிலும் தத்துவம் ஒன்று அமைந் துள்ளது. கண்ணால் காணும் உலகின் பன்மையோனிகளில் இறைவன் உடனாகி நின்ற காட்சி முதற்காட்சி, இறைவன் காணப்பெறும் உலகினொடு உடனாகி நிற்பதேயல்லாமல் தனித்து வேறாகியும் நிற்பான்; இந்தக் காட்சியே இரண்டாவது காட்சி. இரண்டாவதாகக் காணப்பெறும் இக் கோயிற் காட்சியே 'கயிலைக் கோலம் பற்றியதாகும்.