பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO மூவர் தேவாரம் - புதிய பார்வை அன்பினால் இறைவனைப் போற்றிசைக்கும் தோத்திர ஒலியும் மறை முழக்கமும் எம் மருங்கும் முழங்குகின்றன. தேவர், தானவர். சித்தர், வித்தியாதரர், இயக்கர் முதலிய கணங்களும் தவ முனிவர்களும் எவ்விடத்தும் நெருங்கிப் போற்றுகின்றனர். அரம்பையர் முதலியோர் இசைபாடுகின்றனர். இறைவனது திருமுன்னர் அவருடைய வாகனமாகிய செங்கண்மால் விடை எதிர் நிற்கின்றது. பெரிய தேவராகிய நந்தி யெம்பெருமான் பிரம்பினைக் கையிலேந்தி இறைவனது திருமுன்னிலையில் பணி செய்து உதவுகின்றார். வெள்ளி மலையின் மேல் பவளமலை யொன்று மரகதக் கொடியுடன் விளங்குவது போன்று திருக் கயிலாயத்தில் 'செம்மேனி எம்மானாகிய சிவபெருமான் நீல மேனி நேரிழையாகிய உமையம்மையுடன் வீற்றிருந்தருளுகின்றார். இந்த அழகிய தெய்வக் காட்சியைக் கண்டு மகிழும் நாவேந்தர் தலைமிசைக் கைகுவித்து நிலமிசை வீழ்ந்து பணி கின்றார்." வேறாகி விண்ணாகி (6:55) என்பது இவர் பணிந்து போற்றிய திருத்தாண்டகம். வேறாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி யுள்ளே ஒலித்தாய் போற்றி ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி (1) என்பது இதன் முதற் பாடல். இப் பதிகத்தின் பதினொரு பாடல் களையும் சேவித்து அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றார். 86. பெரி.புரா. திருநாவு புரா. 373-381