பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 99 இந்நிலையில் தெய்வ முனிவர் நாவேந்தரின் உள்ளத்தின் உறுதியை அறிந்து விண்ணிலே மறைகின்றார். விண்ணில் விடை யவனின் குரல் கேட்கிறது அசரீரியாக 'ஓங்கு நாவுக்கரசனே. எழுந்திரு' என்பது அக்குரல். அப்பர் பெருமானின் அழிந்த உடலுறுப்பெல்லாம் முன் போல் நிரம்பப் பெற்று எழில் பெற்ற திருமேனியுடன் எழுந்து நிற்கின்றார். 'என்னை ஆண்டு கொண் டருளிய அண்ணலே. விண்ணிலே மறைந்தருளிய வேதநாயகனே, கயிலையில் எழுந்தருளியிருக்கும் நின் திருக்கோலத்தை நான் கண்ணினால் கண்டு சேவிப்பதற்கு நயந்தருள் புரிவாயாக' என நிலமிசை வீழ்ந்து இறைஞ்சுகின்றார். அப்பொழுது மீண்டும் அசரீரியாக 'நீ இந்தப் பொய்கையில் மூழ்கி, நாம் கயிலையில் இருக்கின்ற கோலத்தைப் பழுதில் சீர் திருவையாற்றில் கண்டு மகிழ்வாயாக" எனப் பணித்தருளுகின்றார்." ஐயாற்றில் கண்ட கயிலைக் காட்சி: கயிலை நாதனின் அருள்வாக்கினைத் தலைமேற் கொண்டு நாவேந்தர் இறைவன் காட்டிய பொய்கையில் திருவைந்தெழுத்தோதி மூழ்குகின்றார். திருவையாற்றிலுள்ள ஓர் தடாகத்தில் தோன்றிக் கரையேறு கின்றார். எம்பெருமானின் கருணை இதுவென உணர்ந்த திருநாவுக் கரசரின் கண்களில் அன்பு நீர் சொரிய இறைவனை வணங்கச் செல்லுகின்றார். திருவையாற்றில் உள்ள நிற்பன நடப்பன ஆகிய எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய்த் துணையோடும் திகழ்தலைக் காண்கின்றார். அவற்றைச் சக்தியும் சிவனுமாகிய தன்மையால் பணிந்து திருக்கோயிலுக்கு முன் செல்லுகின்றார். அப்பொழுது திருக்கோயில் கயிலை மால்வரையாகத் தோற்று கின்றது." அங்கே திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் 84. மேலது - 367-369 85. இது பார்த்தனுக்குப் பரந்தாமன் காட்டிய விசுவருப தரிசனம் போன்றது என்று கருதலாம்.