பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மூவர் தேவாரம் - புதிய பார்வை மன உறுதி இருந்தாலும் உடல் வன்மை செயற்படவில்லை. மெல்ல நகர்வதற்கு முயன்றும் அது கூடாமையால் சொல்வேந்தர் அவ் வழியிலேயே செயலற்றுத் தங்குகின்றார். அடியார்களின் ஆசையை நிறைவேற்றுவதற்குத் தயங்காத கயிலை நாதன் நாவேந்தர் செல்லும் வழியில் ஒரு தடாகத்தை உண்டாக்கித் தாமும் வற்கலை யாடையும் சடை முடியும் உடைய ஒரு முனிவர் வடிவத்துடன் அவர்க்கு முன் வந்து நிற்கின்றார். நின்றவர் நீர் எங்குச் செல்கின்றீர்?' என்று கேட்கின்றார்." முனிவரின் தெய்வத்திருக்கோலமே முதலில் சொல் வேந்தரைக் கவர்ந்து விடுகின்றது. மாசில்லாத உண்மைத் தவக் கோலத்துடன் நின்ற அம் மறையவரைப் பார்த்த அளவிலேயே அவரிடம் பேசும்படியான ஒரு தெய்விக உணர்வைப் பெறுகின் றார். பேசுகின்றார் 'முனிவர் பெருமானே வடகயிலையில் கயிலை நாதன் மலை மகளுடன் எழுந்தருளி யிருக்கும் திருக் கோலத்தை அவர்தம் அடியவனான யான் கண்ணாரக் கண்டு வணங்க வேண்டுமென்ற விருப்பம் உந்தப் பெற்று வந்தேன்' என்கின்றார்." இது கேட்ட அந்தத் தெய்வ முனிவர் 'திருக்கயிலை மலை தேவர்களாலும் அணுகுதற்குரியது. நிலவுலகில் வாழும் மனிதர் களில் அடைவதற்குரிய எளிமையுடைத்தன்று. நீர் வெம்மை மிக்க இக் கடுஞ்சுரத்தில் வந்து என்ன காரியம் செய்தீர்! அங்கம் கரைய இங்கு வந்தடைந்தது உம் அறியாமை தானா? இங்கிருந்து மீண்டு போதலே நீவீர் செய்யத்தக்கது' என்கின்றார். இங்ங்னம் முனிவர் கோலத்துடன் வந்த இறைவன் மொழியக் கேட்ட நாவரசர், 'என்னையாளும் ஈசனின் கயிலை கண்டல்லது நான் மீளேன்; மாளும் இவ்வுடல் ஈண்டே மரித்தாலும் கவலை கொள்ளேன்!" என மறுத்துரைக்கின்றார்." 81. மேலது - 361-62 82. மேலது 363364 83. மேலது - 365-366