பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 105 'நம்பியாரூரர் என்பது திருவாரூரில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம் ஆகும். நடு நாட்டை ஆண்ட நரசிங்க முனையர் என்பவர் குழந்தையின் அறிவொளியால் ஈர்க்கப் பெற்று நட்பின் மிகுதியால் சடையனாரிடம் அக்குழந்தையை வேண்டிப் பெறுகின்றார். இளவரசன் என்ற முறையில் அன்பி னால் வளர்த்து வருகின்றார். அரசர் மனையில் வளர்க்கப் பெற்ற போதிலும் அந்தணர் மரபிற்கேற்ப முப்புரி நூலணிந்து நான்மறை களையும் ஆறங்கங்களும் (7.2.11) முதலாகவுள்ள சாத்திர நூல்கள், கலை நூல்கள் முதலியவற்றை யெல்லாம் கற்றுத்துறை போக வித்தகராகின்றார். மணப் பருவம் வருகின்றது. தங்கள் குடும்பத்தோடு ஒத்த குடும்பத்தினராய் புத்தூரில்" வாழும் சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளை மணமகளாக உறுதி செய்கின்றனர். திருமண நாளன்று தடுத்தாட் கொள்வதற்காக சிவபெருமான் ஒரு முதியவர் வேடந்தாங்கி வந்து வழிவழி வந்த அடியவன்' என்று கூறித் திருமணத்தை நிறுத்தி விடுகின் றார். நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வர திருவெண்ணெயம்பதியிலுள்ள அருட்டுறை' என்னும் திருக்கோயிலில் புகுந்து மறைகின்றார். அனைவரும் செயலொன் றறியாது திகைத்து நிற்கின்றனர். தடுத்தாட்கொண்டருளிய அருட்டுறை ஈசன் உமையம்மை யாருடன் விடை மீதமர்ந்து விசும்பில் தோன்றி நாவலூராருக்குக் காட்சி தந்தருள்கின்றார். நம்பியாரூரரை நோக்கிப் பித்தா என்று தொடங்கிப் பாடிப் போற்றுமாறு பணிக்கின்றார். தம்முடன் வன்மொழிகளைப் பேசினமையால் 'வன்றொண்டன் என்ற பெயரையும் தந்து அருளுகின்றார்." நாவலுராரை நன்மணம் புரிந்து கொள்ள விரும்பிய நங்கை நம்பியாரூரரை வழிபடு 90. இந்த ஊர் முன்பு மணம் வந்த புத்துர் என வழங்கி வந்தது. இது திரிந்து 'மணம் தவிர்ந்த புத்துர் என மாறியது. இப்போது அப் பகுதி மக்கள் 'மணமந்த புத்தூர்' என்று வழங்குகின்றனர். 91. உமாதேவியின் அருள் பெற்றமையால் அருட்டுறை ஆயிற்று. 92. பெரி. புரா. தடுத்தாட் கொண்ட-77