பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O6 மூவர் தேவாரம் - புதிய பார்வை தெய்வமாகத் தம் உள்ளத்தில் நிறுத்தித் தியானிக்கும் மெய்யறி வுடையராய்ச் சில காலம் வாழ்ந்து இவ்வுலக வாழ்வை நீத்து உயர்ந்த சிவலோக வாழ்வாகிய பேரின்பம் கைவரப் பெறுங் கைலைநாதன் கழலிணையடிகளைச் சேர்கின்றார். 1. தடுத்தாட் கொள்ளப் பெறுதல்: இது குறித்த பதிகம் (7.1)os பித்தாபிறை சூடிபுெரு மானேஅரு ளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணெய்த் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இந்நிகழ்ச்சிகளை எல்லாம் ஆரூரன் வாய்மொழிகளாக, அவருடைய திருப் பாடல்களா லேயே அறிந்து கொள்ளலாம்." 2. சிவபெருமான் திருவடி சூட்டப் பெறுதல்: திருத் துறையூர்” இறைவனை தவநெறி வேண்டி மலையார் அருவி' (7.13) என்று பாடி அவ்விறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு பல தலங்களை வழிபட்டுக் கொண்டு பொன்னம்பலத்தை நினைந்த வண்ணம் வருங்கால் மாலைப் பொழுது கண்ணும் பொழுது திருவதிகையை அடைகின்றார். அப்பர் பெருமானுக்குச் சூலை நோய் அருளி நோய் நீக்கி நாவுக்கரசு என்ற பட்டம் தந்த வீரட்டானத்திறைவர் எழுந்தருளிய ஊரைக் காலால் மிதித்தற்கும் அஞ்சி அப்பதியின் புறத்தே அமைந்த சித்தவட 93. ஏழாம் திருமுறையில் முதற் பதிகமாக அமைந்துள்ளது. 94. சுந் தேவா.7.17:1,2,3,8,10, 7.18:7; 7.63:5; 7.68:68 முதலியவை காண்க 95. திருத்துறையூர் சென்னை எழும்பூர் விழுப்புரம் இருப்பூர்தி வழியில் திருத்துறையூர் என்ற நிலையத்திலிருந்து ஒன்றரைக் கல் தொலைவு. இது சிவஞான சித்தியார், அருளிய அருணந்தி சிவாச்சாரியார் அவதரித்த தலம்.