பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 107 மடத்தில்" அடியார்களுடன் தங்குகின்றார். இங்கிருந்தபடியே வீரட்டானத்திறைவனின் திருவடிகளைச் சிந்தித்த வண்ணம் திருமடத்தில் துயில் கொள்ளுகின்றார். இந்நிலையில் அதிகை வீரட்டானத்திறைவன் தளர்ந்த ஒரு முதியவர் வேடங் கொண்டு அம் மடத்தில் புகுகின்றார்; வன்றொண்டர் அருகில் படுத்துறங்கும் பாவனையில் அவர்தம் திருமுடிமீது தம் திருவடிகள் பொருந்து மாறு படுக்கின்றார். விழித்துணர்ந்த வன்றொண்டர் மறையவரை நோக்கி 'பெரியோய், உம் திருவடியை என் சென்னிமீது வைத் தனையே' என்று கூற, முதியவரும் 'இவ்வாறு திசையறியா வண்ணம் செய்தது என் தளர்ந்த முதுமை நிலையே' என்று மறுமொழி தருகின்றார். வன்றொண்டர் வேறொரு பக்கம் தலை வைத்துத் துயில் கொள்ளத் தொடங்க, அங்கும் தம் திருவடியை நீட்டுகின்றார் முதுமறையவர். இதனையுணர்ந்த நம்பியாரூரர் இங்ங்னம் பலகால் என்னை மிதிக்கும் நீர் யார்?' என்று வினவ, மறையவரும் 'நீர் என்னை அறிந்திலையோ?' என்று சொல்லிய வண்ணம் மறைகின்றார். இந்நிலையில் தம் சென்னியின்மீது திருவடி சூட்டி மறைந்த மறையவர் திருவதிகை வீரட்டானப் பெருமானே எனத் தெளி கின்றார். நம்மானையறியாத (7.38) என்று தொடங்கும் திருப் பதிகம் பாடி திருவீரட்டானத்து இறைவனைப் போற்றுகின்றார். தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல் உடையானை விடையானைக் கரைகொண்ட கண்டத்து எம்மான்றன் அடிகொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்து உறைவானையிறைபோதும் இகழ்வன்போலியானே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல், எம் தலைவனாகிய சிவபெருமான் எப்பொழுதாவது தம் திருவடிகளை என் 96. இந்த மடம் திருக்கோயிலின் தெற்கு வீதியிலுள்ளது. இஃது ஒர் வைப்புத்தலம்.