பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8 மூவர் தேவாரம் - புதிய பார்வை முடிமேல் சூட்டி அருள் புரிவான் என்னும் ஆசையால் வாழ்கின்ற நாயேன், அப்பெருமானே எளிவந்து என் சென்னியில் திருவடி சூட்டியருளிய இந்நிலையில் அவரையறியாது இருமாந்து இகழ்ந் தேனே' என்று இத்திருப்பதிகத்தின் இந்த முதற் பாடலில் நம்பியாரூரர் கவன்று உரைப்பதைக் கண்டு மகிழலாம். திருவடி தீட்சை திருவிளையாடல் நிகழ்ந்த நிலையில் இப்பதிகம் தோன்றியது என்ற வரலாறு தெரிகின்றது. (3) தம்பிரான் தோழனாதல்: சீகாழிப் பகுதியில் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த நம்பியாரூரர் திருக்கோலக்கா, திருப்புன்கூர் முதலிய பல தலங்களை வழிபட்டுக் கொண்டு இறுதியில் திருவாரூருக்கே வந்து சேர்கின்றார். அத்திருத்தலத் தில் கோயில் கொண்ட பெருமான் ஆரூரில் வாழும் அடியார் கட்குமுன் தோன்றி 'நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர் கொண்டு அழைப்பீராக’ என அருளிச் செய்து மறைந்தருளினார். இறைவனது திருவருள் இஃதென உணர்ந்த அடியார்களும் நகர மாந்தரும் திருவாரூரைச் சிறப்புற அலங்கரித்து மங்கல வாத்திய ஒலிகள் முழங்க ஆரூர்த் திருமதிவாயில் புறத்துச் சென்று நம்பியாரூரரை எதிர் கொண்டு வணங்கினார்கள். திருநாவலுராரும் அடியார்களைக் கை தொழுது 'எந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பெருஞ்சிறப்புடைய திருப்பதியும் இத்திருவாரூரே. இங்கெழுந்தருளிய இறைவன் எளியேனையும் ஆட்கொண்டருளும் இசைவுடையாரோ என்பதனை அன்பு கூர்ந்து அவர் பால் தெரிவிப்பீராக' என வினவி வேண்டு கின்றார். இக்குறிப்புடைய பதிகம் 'கரையும் கடலும் (7.73) என்பது இதன் முதற்பாடல். கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்