பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O மூவர் தேவாரம் - புதிய பார்வை தம்பிரான் தோழருக்கு அருள் புரிந்த ஒற்றியூர் இறைவன் சங்கிலியாரின் கனவில் தோன்றுகின்றார். 'வெண்ணெய் நல்லூர் தம்பிரான் தோழன் உன்னைத் தருமாறு என்னை இரந்தான்; நீ அவனை மணந்து இன்புறுக' என்று பணிந்தருள்கின்றார். சிவபெருமானின் அருள்மொழியைக் கேட்ட சங்கிலியார் அப்பெருமானிடம் நும்மால் அருள் செய்யப் பெற்றார்க்கு உரியேன் அடியேன். ஆனால் அவர் திருவாரூரில் தங்கியிருக்கும் விருப்பமுடையவராயிற்றே' என்று நாணி உரைக்க, வன்றொண் டரின் இந்த நிலையை உணர்ந்து 'அந்த வன்றொண்டன் 'நின்னை விட்டுப் பிரியேன் என்று உனக்குச் சூளுரை செய்து தருவான்' என்று அருளிச் செய்கின்றார். பின்னர் இறைவன் தம்பிரான் தோழர்பால் சென்று. 'நின் விருப்பத்தை சங்கிலியாரிடம் தெரிவித்தோம். அவர் ஒருவாறு ஒப்புக் கொண்டார். நீ இன்றிரவே அவள்பாற் சென்று “நின்னை விட்டுப் பிரியேன்" என்று சூளுரைத்துத் தருதல் வேண்டும். இனி, இந்த ஏற்பாட்டில் செய்யத் தக்கது உண்டாயின் அதையும் தெரிவிக்க' எனப் பணித்தருள்கின்றார். சங்கிலியாரிடம் தம் மனத்தைப் பறி கொடுத்த வன்றொண்டர் 'பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் அடியேனுக்கு இவ்வாறு சூளுரைத்துத் தருதல் பெருந் துன்பமாக முடியும்' என்ற நினைவுடையவராய், இறைவனை நோக்கி நான் அவளிடம் திருக்கோயிலில் நும் திருமுன்னர் நின்னைப் பிரியேன் என்று சூளுரைக்க வருங்கால், தேவரீர் அவ்விடத்தை விட்டு ஆலயத்திலுள்ள மகிழ மரத்தடியின்கீழ் எழுந்தருளியிருத்தல் வேண்டும்' என வேண்டுகின்றார். இறைவனும் அவ்வேண்டு கோளுக்கு இசைந்தருள்கின்றார். நம்பியாரூரரும் இறைவனை ஏத்தி மகிழ்கின்றார். சிவபெருமானும் முன்போல் சங்கிலியாரின் கனவில் தோன்றி, 'நங்காய், வன்றொண்டன் சூளுரைத்துத் தருதற்கு இசைந்து