பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 119 அமர்ந்து அன்பு நாராக, அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுக்க, நறுமலர் மாலை தொடுத்து இறைவனுக்கு எழில் பெறச் சாற்றும் படி மலர்த் தொண்டு புரிந்து வருகின்றார். இது பண்டு கயிலைத் திருமலையில் புரிந்து வந்த பூர்வ வாசனையினால் ஏற்பட்ட தென்று நாம் கருதலாம். ஊழ் செயற்படத் தொடங்குதல்: ஒற்றியூர்ப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்திருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மலர் மாலை தொடுக்கும் திருமண்டபத்தை அணுக நேரிடுகின்றது. அப்பொழுது இறைவனுக்குச் சாத்தும்படி தாம் தொடுத்த மலர் மாலைகளைக் கொடுத்து விட்டு மின்னற் கொடி போல் திரையினுள்ளே மறை யும் சங்கிலியாரை இறைவனருள் கூட்டிய நல்விதியால் கண்ணு கின்றார்; காதல் அரும்பத் தொடங்குகின்றது. அவரை விசாரித்து இன்னார் என்பதை அறிகின்றார் தம்பிரான் தோழர். அவர் மனம் சிந்திக்கத் தொடங்குகிறது. பூர்வ ஞானம் தட்டுப்படுகின்றது. 'மகளிர் இருவர் காரணமாக இப்பிறவியைக் கயிலை நாதர் எனக்கு எய்துவித்தருளினார். அவ்விருவருள் ஒருத்தி பரவையார் என்பது தெளிவாயிற்று. மற்றையவள் சங்கிலியாகிய இந்நங்கை யாக இருக்குமோ' என்று ஐயுறுகின்றார். ஒற்றியூர் இறைவன் பால் வேண்டி இவளைப் பெறுவேன் என்று துணிகின்றார். ஒற்றியூர் இறைவன் சந்நிதியை அடைந்து அவரைக் குறையிரந்து வேண்டுகின்றார். 'நீர் மட்டும் இருவரை மணந்து கொண்டுள்ளீர். நும் அடியனான நான் மட்டும் இருவரை மணந்து கொள்ளலாகாதா?' என்று வேண்டுகின்றார். திருக்கோயிலை விட்டு வெளியில் வந்தவர் துயில் கொள்ளு கின்றார். இரவில் ஒற்றியூர் இறைவன் அவர்பால் வந்து 'இருந்த வத்துக் கொம்பை உனக்குத் தருகின்றோம்; நீ கொண்ட கவலையை ஒழிக" என்கின்றார். தம்பிரான் தோழர் ஒற்றியூர் இறை வனின் திருவடிகளை நினைந்து இறைஞ்சிப் போற்றுகின்றார்.