பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மூவர் தேவாரம் - புதிய பார்வை பெற்றோர் துணுக்குற்று அச்சமும் வியப்பும் எய்தி தம் மகள் சொன்னதை உலகோர் அறியாமல் மறைத்து விடுகின்றனர். இந்நிலையில் ஞாயிறு கிழவரின் குலத்தான் ஒருவன் சங்கிலியாரின் தகுதியை உணராமல் மணம் செய்து கொள்ள விரும்புகிறான். மணம் பேசி வருவதற்குச் சிலரை அனுப்புகி றான். ஞாயிற்றுக் கிழவர் தம் மகளது மனக் கருத்தினை வெளி யிடுதல் தகுதியன்றெனக் கருதி வேறொரு வகையால் சமாதானம் கூறி அனுப்பி விடுகின்றார். இவர்கள் திரும்பிச் செல்வதற்கு முன்னர் மணம் பேச அனுப்பியவன் அங்கு வந்து சால்பு மிக்க சங்கிலியாரை இகழ்ந்துரைக்கின்றான். இவனது அடாத செய லைக் கண்டு வெறுப்புற்ற பெரியோர்கள் இவன் இறந்தவனை ஒத்தான்' என எண்ணி அவனை அவ்விடத்தை விட்டு அகற்று கின்றனர்; அங்ங்னம் சென்ற அவன் விரைவில் இறந்தொழி கின்றான். இச்செய்தி ஞாயிறு கிழவரை எட்டுகிறது. உடனே அவர் சுற்றத்தார்களைக் கூட்டி தம் மகள் கருத்தை உள்ளபடி எடுத்துரைக்கின்றார். மிகவும் அச்சமுடையவராய் 'இனி சங்கிலியார் கருதிய வண்ணம் திருவொற்றியூரில் சிவத்தொண்டு புரிய ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று துணிகின்றனர். சுற்றத்தாருடன் சங்கிலியாரைத் திருவொற்றியூருக்கு இட்டுச் சென்று, திருவொற்றியூர் இறைவனை வழிபடுகின்றனர். அவ்வூர் மக்கள் இசைவு பெற்று திருக்கோயிலின் அருகே கன்னி மாடம் ஒன்று அமைக்கின்றனர். அதில் தம் அருமைப் புதல்வியை இருக்கச் செய்து, 'நாங்கள் நினக்கு வேண்டிய பணிகளைச் செய்கிறோம்; நீ கன்னி மாடத்தில் தங்கி சிவபெருமானுக்கு உரிய திருத்தொண்டுகளைச் செய்வாயாக' என்று கூறி தம் ஊர் திரும்பு கின்றார் ஞாயிறு கிழவர். கன்னி மாடத்தில் உறையும் சங்கிலியார் நாள்தோறும் மூன்று காலங்களிலும் ஒற்றியூர் இறைவனைப் பணிந்து திருக்கோயிலில் திருமாலை தொடுக்கும் மண்டபத்தில் திரையிட்டிருக்கும் இடத்தில்