பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 117 மறையவரைக் காணாமல் வியப்பெய்துகின்றார். இவ்வாறு வந்து அருள் புரிந்தவர் ஆலநிழற் கீழிருக்கும் குருகாவூர்ப் பெருமானே என்று தெளிகின்றார். 'இத்தனை யாமாற்றை அறிந்திலேன்' (7.29) என்று தொடங்கும் செந்தமிழ்ப் பாமாலையைப் பாடிக் கொண்டே திருக்கோயிலை அடைகின்றார். இப்பதிகத்தின், பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஒடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் விடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. (3) என்ற மூன்றாவது பாடல் பொதி சோறு நல்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. பாடல்களால் பரமனைத் தொழுது உளங் குளிர்கின்றார் தம்பிரான் தோழர். (9) சங்கிலியாரையும் தம்பிரான் தோழருடன் பிணைத்து மற்றொரு துணைவியாக்கல்: திருக்கயிலாயத்தில் உமை யம்மையாரின் சேடியருள் மற்றொருவர் அநிந்தையார். இவர் தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் ஞாயிறு கிழவர் என்ற வேளாளருக்கு அருமைத் திருமகளாகப் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சங்கிலியார். இவர்தம் பெதும்பைப் பருவத்தில் பெற்றோர் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். சங்கிலியார் இதனைக் கேள்வியுற்று ஈசன் திருவருள் பெற்றார் ஒருவருக்கே துணைவியாக நினைத்திருக்கும் தம் கருத்துக்கு மாறாக இருப்பதால் மனம் கலங்கி மூர்ச்சித்து நிலமிசை வீழ்கின்றார். மூர்ச்சை தெளிவித்து அவளைக் காரணம் கேட்க, அவர்தம் உளக் கருத்தைத் தெரிவிக்கின்றார். திருவொற்றியூரை அடைந்து சிவனார் அருளிற் செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.