பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மூவர் தேவாரம் - புதிய பார்வை (8) பொதிசோறு அளித்த நிகழ்ச்சி. பல தலங்களை வழிபட்டுக் கொண்டு சீகாழிப் பதிக்கு வருகின்றார் தம்பிரான் தோழர் அப்பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கி அத் திருப்பதியில் திருவவதாரம் செய்தருளின முத்தமிழ் விரகராகிய காழிப் பிள்ளையார்த் திருவடிகளைப் போற்றி குருகாவூர்" திருப்பதியை நோக்கி வருகிறார். வருகிறவர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்துவதை அறிந்த சிவபெருமான் வழி யிடையே ஓர் அந்தணர் வடிவங் கொண்டு தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வந்து வெயில் வெப்பம் நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி தம்பிரான் தோழரை எதிர் நோக்கி இருக்கிறார். அப்போது நாவலூர் வேந்தர் அடியார் திருக்கூட்டத் துடன் அவ்விடத்தே போந்து பந்தரின் கீழே போய் அங்குள்ள மறையவர் பக்கலிலே சிவாயநம என்று ஐந்தெழுத்தை ஒதிக் கொண்டே அமர்கின்றார். வேதியராய் வந்து எழுந்தருளியுள்ள சிவபெருமான் அவரை நோக்கி நீவிர் பசிக்குள்ளவராகக் காணப்படுகின்றீர்; நான் கொண்டு வந்த பொதி சோற்றையுண்டு தண்ணீர் பருகி பசியைத் தணித்துக் கொண்டு இளைப்பாறுவீர் களாக' என்று அன்புடன் வேண்டிக் கொள்ளுகின்றார். தம்பிரான் தோழரும் அதற்கிசைந்து அவர் அன்புடன் நல்கிய பொதி சோற்றை வாங்கி அடியார்களுடன் அமுது செய்கின்றார் உடன் வந்த பரிசனங்களையும் உண்ணும்படி செய்கின்றார். பொதி சோறும் யாவர்க்கும் போதுமான அளவு பெருகி வளர்கின்றது. அறவாழி அந்தணர் அளிக்கும் சோறு அல்லவா? உரிய நேரத் தில் உணவளித்த மறையவரைப் பாராட்டி அடியார்களுடன் துயிலிலமர்கின்றார் தம்பிரான் தோழர். இந்நிலையில் மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தருளுகின்றார். துயில் உணர்ந்தெழுந்த நாவலூரார் 102. குருகாவூர் (திருக்கடவூர்) சீகாழியிலிருந்து 3 1, கல் தொலைவில் உள்ளது. இறைவன் சுந்தரருக்குக் கட்டமுது தந்ததைப் பதிகப் பாசுரம் பகர்கின்றது.