பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 115 திருமுன் நின்று "நீள நினைந்து" (7.20) என்ற திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். நீளநினைந்து அடியேன்உமை நித்தலும் கைதொழுவேன் வாளன.கண் மடவாள்.அவள் வாடி வருந்தாமே கோளிலிஎம் பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவையட்டித் தரப்பணியே. (1) என்பது முதல் பாடல். இதில் ஒரு முறைக்கு ஒன்பது முறை 'அவையட்டித் தரப் பணியே' என்று கோளிலி எம்பெருமானை வேண்டிக் கொள்வதைக் காணலாம். சிவபெருமான் அருளால் 'இன்று பகற் பொழுது கழிந்ததும் நம்முடைய பூத கணங்கள் பரவையார் வீடு மாத்திரமின்றித் திருவாரூர் முழுவதிலும் நெல்லைக் கொண்டு வந்து குவித்து விடும்' என்றதோர் அருள் வாக்கு வானிடை எழுந்தது. இச் செய்தி கேட்டு மகிழ்ந்த தம்பிரான் தோழர் திருவாரூர் திரும்பி நிகழ்ந்தவற்றைப் பரவையாருக்குத் தெரிவித்துச் சிவ சிந்தனை யோடு இருக்கின்றார். அன்றிரவே பூத கணங்கள் குண்டையூரி லிருந்த நெற் குவியலைப் பரவையார் இல்லத்திலும் திருவாரூர்த் தெருக்களிலும் நிரப்பி விடுகின்றன; மறுநாள் துயில் உணர்ந் தெழுந்த பரவையார் நெற்குவியலைக் கண்டு வியப்புறுகின்றார். ஆரூர் மக்கள் அவரவர் மனை எல்லைக்குட்பட்டுக் கிடக்கும் நெற்குவியலை அவரவர் வாரிக் கொள்ளலாம் என்று வென்றி முரசறைவிக்கின்றார் பரவையார்." சுந்தரர் பதிகம் பாடி சிவபெருமான் ஏவலால் பூதகணங்கள் குண்டையூரில் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் சென்று சேர்த்த அற்புதத் தலம். குண்டையூர் இங்கிருந்து 314 கல் தொலைவிலுள்ளது. குண்டையூரிலிருந்து திருவாரூர் 16 கல் தொலைவு. கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர். 101. பெரி. புரா, ஏயர்கோன் - 28