பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மூவர் தேவாரம் - புதிய பார்வை தலங்களைச் சேவித்துக் கொண்டு திருவாரூரை அடைகின்றார். அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவனை நாளும் பணிந்து பரவையாருடன் இனிது மகிழ்ந்து வாழ்க்கை நடத்துகின்றார். (7) குண்டையூர்க் கிழவர்க்கு நெற்குவியலை அருளியது: நம்பியாரூரர் குடும்பத்திற்குத் தேவையான செந்நெல், பருப்பு முதலிய உணவுப் பொருள்களைக் குண்டையூர்க் கிழவர் என்னும் வேளாளர் அன்புடன் அனுப்பிக் கொண்டிருக்கின்றார். இப்பணி இடையறாது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. ஒரு சமயம் வான் பொய்த்தமையால் நாட்டில் வற்கடம் உண்டாகின் றது. இப்பஞ்சம் குண்டையூர்க் கிழவரையும் தாக்குகின்றது. நாவலூராருக்கு நெல் அனுப்ப முடியவில்லையே என்று பெருங் கவலை கொள்கின்றார். அன்று உண்ணா நோன்பினை மேற் கொண்டு அயர்ந்து துயில்கின்றார். சிவபெருமான் அவரது கனவில் தோன்றி 'நம்பியாரூரர் பொருட்டு நுமக்கு நெல்லைத் தந்தோம்!' என்று உரைத்துக் குபேரனை ஏவுகின்றார். அவன் குண்டையூர் முழுவதும் நெல் மலை மலையாகக் குவித்திடச் செய்கின்றான். வைகறையில் விழித்தெழிந்த குண்டையூர்க் கிழவர் மலை போலும் நெற் குவியலைக் கண்டு வியப்புற்று இறைவன் கருணைத் திறத்தை போற்றுகின்றார். இந்நெற்குவியலை வன்றொண்டரிடம் சேர்ப்பிக்கும் வழி காண்பான் வேண்டி திருவாரூரை நோக்கி நடக்கின்றார். தம் பொருட்டுக் குண்டையூர்க் கிழவருக்கு நெல் அளித்த செய்தியை இறைவனால் அறிந்த நம்பியாரூரர் குண்டை யூரை நோக்கி நடக்கின்றார். வழியில் இருவரின் சந்திப்பும் நேரிடுகின்றது. இருவரும் குண்டையூர் வந்து சேர்கின்றனர். 'விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினைக் கண்ட தம்பிரான் தோழர் இறைவன் திருவருள்ை எண்ணி வியக்கின்றார். இதனைத் திருவாரூரில் சேர்ப்பிக்க சிவபெருமான் ஆட்களைத் தந்தாலன்றித் தம்மால் இயலாது என நினைத்து அண்மையி லுள்ள திருக்கோளிலித்" திருக்கோயிலை அடைந்து இறைவன் 100. திருக்கோளிலி (திருக்குவளை) மயிலாடுதுறை - காரைக்குடி இருப்பூர்தி வழியில் திருநெல்லிக்கா நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. சப்தவிடகங்கள் இங்குள்ளவர் அவனி விடங்கர். நடனம் பிருங்க நடனம்.