பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 113 (6) இறையருளால் பொற்கட்டிகளைப் பெறுதல்: நம்பியாரூரர் திருவாரூரில் தங்கியிருந்த பொழுது திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்குகிறது. இதனை அறிந்த தம்பிரான் தோழர் திருவிழாவில் பரவையாரின் செலவுக்குப் பொன்னைக் கொண்டு வரும் பொருட்டுத் திருபுகலூரை" அடை கின்றார். திருக்கோயிலுள்ள இறைவனைப் பணிந்து போற்றுகின் றார். அண்மையிலுள்ள திருமடத்திற்குச் சென்று ஒய்வு கொள்ளத் திருவுள்ளங் கொண்டு கோயில் வாசலில் அடியார்களுடன் இளைப்பாறுகின்றார். இந்நிலையில் இறைவன் திருவருளால் இவருக்கு உறக்கம் வரத் தொடங்குகின்றது. அருகில் திருக்கோயி லின் திருப்பணிக்காக அடுக்கி வைக்கப் பெற்றிருந்த செங்கல் களில் சிலவற்றைக் கொணரச் செய்து அவற்றைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு அவற்றின்மீது தம் மேலாடையை விரித்துத் துயில் கொள்ளுகின்றார். துயிலுணர்ந்தெழுந்தபோது தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறி யிருக்கக் கண்டு வியப்பெய்துகின்றார். உடனே திருக்கோயிலினுட் சென்று திருப்புகலூர் இறைவனின் திருவருளை நினைந்து வணங்கி, தம்மையேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்! இம்மையேதரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகம் ஆள்வதற் கியாது மையுற வில்லையே. (11) (1) என்ற முதற் பாடலையுடைய திருப்பதிகம் (7:34) பாடிப் போற்றுகின்றார். திருபுகலூர் இறைவன் அளித்த பொற்கட்டிகளை எடுத்துக் கொண்டு அடியார்களுடன் அங்கிருந்து புறப்பட்டுப் பல 99. திருப்புகலூர் அப்பர் சுவாமிகள் முக்தி பெற்ற தலம். நன்னிலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ளது.