பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மூவர் தேவாரம் - புதிய பார்வை திருமுன்பு சாற்றுதலாகாது' என்று செப்புகின்றனர். இந்நிலை யில் இறைவனது திருக்குறிப்பை அறியாது 'சேயிழையீர், யான் வேறு எவ்விடத்தில் சூளுரைத்துத் தருதல் வேண்டும்?' என்று வினவுகின்றார். சேடியர்கள் இங்குள்ள மகிழ மரத்தடியில் சூளுரைத்தால் போதும்' என அவர்கள் மறுமொழி தருகின்றனர். நம்பியாரூரர் இதனைச் செவிமடுத்து மருட்சி அடைகின் றார். சேடியர் சொல்லுக்கு மறுத்தால் பழம் நழுவிப் போகும்: திருமணம் நடைபெறாமல் போகலாம் என்று அதற்கு உடன்படு கின்றார். உடனே மகிழ மரத்தை மூன்று முறை வலம் வந்து சங்கிலியாரை நோக்கி இங்கு நின்னை விட்டுப் பிரியேன்" என்று சூளுரைத்துத் தருகின்றார். சங்கிலியார் சூளுறவில் வழுவினால் நேரிடும் ஏதத்தை நினைத்துக் கலங்குகின்றார். 'தீவினை யாட்டி யேன் தம்பிரான் பணியில் இச்செயலையும் காண நேர்ந்ததே' என்று எண்ணியவராய் ஒரு மருங்கு மறைந்து நிற்கின்றார். 'தம்பிரான் தோழரும் சூளுறவு முடிந்தபின்னர் திருக்கோயிலினுட் புகுந்து தம்பிரானைப் பணிந்து, 'நாளும் அருள் தரும் தாங்கள் இன்று செய்த இச்செயல் மிகவும் அழகுடையது' என்று கூறிப் போற்றி மகிழ்ந்த வண்ணம் திருக்கோயிலை விட்டு அகல்கின் றார். சங்கிலியாரும் மலர் தொடுத்துப் பணியாற்றும் செயலை முற்றுவித்துக் கன்னி மாடத்தை எய்துகின்றார். திருமணம் நிகழ்தல்: இங்ங்னம் இது நடைபெற்றிருக்க, இதற்கு முன்னரே ஒற்றியூர் இறைவன் சிவனடியாரின் கனவில் தோன்றி, "நம்முடைய அடியவனான வன்றொண்டனுக்கு நங்கை சங்கிலியாரை உலகோர் அறியத் திருமணம் செய்துவித்தருள்வீர் களாக' என்று அருளிச் செய்து மறைந்தருள்கின்றார். திருமணமும் நடந்தேறுகின்றது. மணமக்கள் வள்ளுவர் காட்டிய வழியில் 103. குலமகளுக்கு இவ்வுணர்ச்சி ஏற்படுவது சங்க இலக்கியத்தின் நெறி என்பது. சங்க இலக்கியங்களில் பயிற்சியுடையார்க்கு நினைவிற்கு வராமற் போகாது.